கோவையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து சீர்செய்யும்‌ பணி

கோவை : கோவையில் மாநகரில்‌ நிலவி வரும்‌ போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சட்டம்‌ (à®®) ஒழுங்கு ஆய்வாளர்கள்‌, உதவி ஆய்வாளர்கள்‌ மற்றும்‌ காவலர்கள்‌ போக்குவரத்தை சீர்‌ செய்யும்‌ பணியில்‌ ஈடுபடவுள்ளனர்‌.

கோவை : கோவையில் மாநகரில்‌ நிலவி வரும்‌ போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சட்டம்‌ (à®®) ஒழுங்கு ஆய்வாளர்கள்‌, உதவி ஆய்வாளர்கள்‌ மற்றும்‌ காவலர்கள்‌ போக்குவரத்தை சீர்‌ செய்யும்‌ பணியில்‌ ஈடுபடவுள்ளனர்‌.

கோவை மாநகரில்‌ தற்போது திருச்சி சாலை, உக்கடம்‌ ஆகிய பகுதிகளில்‌ மேம்பால கட்டும்‌ பணி நடைபெற்று வருவதாலும்‌, மாநகரில்‌ நிலவி வரும்‌ போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும்‌ பொதுமக்கள்‌ போக்குவரத்து இடையூறின்றி செல்லவும்‌, விபத்துக்களை தடுக்கும்‌ பொருட்டு, கோவை மாநகர காவல்‌ ஆணையாளர்‌ அவர்களின்‌ உத்தரவுப்படி, போக்குவரத்து நெரிசல்‌ மிக்க 75 பகுதிகளை கண்டறிந்து, காவல்‌ துணை ஆணையாளர்‌, தலைமையிடம்‌ பொறுப்பு சட்டம்‌ (à®®) ஒழுங்கு அவர்களின்‌ மேற்பார்வையில்‌ அனைத்து மாநகர காவல்‌ உட்கோட்ட சட்டம்‌ (à®®) ஒழுங்கு காவல்‌ உதவி ஆணையாளர்கள்‌ தலைமையில்‌ இன்று(10.09.19) முதல்‌ காலை 08.30 மணி முதல்‌ 10.30 மணி வரையும்‌, மாலை 5 மணி முதல்‌ 7 மணி வரையும்‌ உள்ளிட்ட கால அளவில்‌ சட்டம்‌ (à®®) ஒழுங்கு ஆய்வாளர்கள்‌, உதவி ஆய்வாளர்கள்‌ மற்றும்‌ காவலர்கள்‌ போக்குவரத்தை சீர்‌ செய்யும்‌ பணியில்‌ ஈடுபடவுள்ளனர்‌.

மேலும்‌, போக்குவரத்து நெரிசல்‌ ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து போக்குவரத்து சீர்செய்யும்‌ பணி கூடுதலாக மேற்கொள்ளப்படும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...