கோவை தேர்தல் களத்தில் தாமரையை எதிர்த்து, சுத்தியல் அரிவாள் நட்சத்திரம்..!

தி.மு.க. தலைவராக ஸ்டாலின் எதிர்கொள்ளும் முதல் தேர்தல் இது. à®….தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியை வீழ்த்தி தனது ஆளுமையை நிரூபிக்க காத்திருக்கிறார். அதற்கேற்ப பா.ஜ.க. எதிர்ப்பு என்ற புள்ளியில் அணி திரண்ட தோழமை கட்சிகளை ஒருங்கிணைத்து, கூட்டணியாக மாற்றியதில் முன்னிலையில் இருந்தது தி.மு.க.. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையையும் சுமூகமாக முடித்தது.



தி.மு.க. தலைவராக ஸ்டாலின் எதிர்கொள்ளும் முதல் தேர்தல் இது. à®….தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியை வீழ்த்தி தனது ஆளுமையை நிரூபிக்க காத்திருக்கிறார். அதற்கேற்ப பா.ஜ.க. எதிர்ப்பு என்ற புள்ளியில் அணி திரண்ட தோழமை கட்சிகளை ஒருங்கிணைத்து, கூட்டணியாக மாற்றியதில் முன்னிலையில் இருந்தது தி.மு.க.. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையையும் சுமூகமாக முடித்தது. 

அதன்படி, கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கியதோடு, 20 தொகுதிகளில் போட்டியிடுவது என அறிவித்தது. சின்னம் கிடைக்காத சில கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில், போட்டியிட வைக்கவும் முடிவு செய்துள்ளது. 

இந்த நிலையில், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இறுதி செய்யப்பட்ட தொகுதி பட்டியலை தி.மு.க. தலைவர் ஸ்டாலின், கூட்டணி கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டுள்ளார். அதில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, கோவை, மதுரை ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 



1967-ம் ஆண்டில் இருந்து கோவை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலை சந்தித்து வருகிறது. கோவை மக்களவை தொகுதியில் 1967, 1971, 1984, 1989, 1991, 1996, 2009, 2014 என 8 முறை போட்டியிட்டுள்ளது. அதில், இரண்டு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கோவை தொகுதியில் போட்டியிட்ட முதல் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த அக்கட்சி வெற்றி பெற்றது. சி.பி.ஐ.(எம்) சார்பில் கே. ரமணி வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு சென்றார். 

ஆனால், அதன் பின்னர் நடந்த தேர்தல்களில் வெற்றி கைகூடவில்லை. நீண்ட இடைவெளிக்கு பின்னர், 2009-ம் ஆண்டு à®….தி.மு.க. கூட்டணியோடு, களமிறங்கிய சி.பி.ஐ.(எம்) வேட்பாளர் பி.ஆர். நடராஜன் வெற்றி பெற்றார். 

தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1967, 1984, 1989, 1991 என 4 முறை கோவை தொகுதியில் போட்டியிட்டுள்ளது. அதில், 1967-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஐந்தாவது முறையாக தி.மு.க. கூட்டணியில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவையில் போட்டியிடுகிறது. 

à®….தி.மு.க. கூட்டணியில் அக்கட்சி 2009-ல் ஒரு முறை கோவையில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளது. 1971-ம் ஆண்டு தனித்து போட்டியிட்டும், 1996-ல் à®®.தி.மு.க. கூட்டணியிலும், 2014-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளது. 



1967-ல் வெற்றி பெற்ற கே. ரமணி, 1971-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் போட்டியிட்டார். ஆனால், தனித்து அக்கட்சி போட்டியிட்டதால் 3-வது இடத்திற்கு அவர் தள்ளப்பட்டார். இதன் பின்னர், 1984 மற்றும் 1989 தேர்தல்களில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட சி.பி.ஐ.(எம்) வேட்பாளர் ஆர். உமாநாத், இரண்டு முறையும் ஒரு இலட்சத்திற்கும் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, இரண்டாம் இடம் பிடித்தார். 1991-ல் மீண்டும் போட்டியிட்ட கே. ரமணியும் தோல்வியடைந்தார். 1996-ல் மதிமுகவோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட அக்கட்சி வேட்பாளர் பி.ஆர். நடராசன் 3-ம் இடம் பிடித்தார். 2014-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோடு, சேர்ந்து போட்டியிட்ட அக்கட்சி வேட்பாளர் பி.ஆர். நடராசன் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

மீண்டும் பி.ஆர். நடராசன் :

கோவையில் போட்டியிட வேண்டுமென்பதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக இருந்தது. அதற்கேற்ப தி.மு.க.விடம் கேட்டுப் பெற்றுள்ளது. இம்முறை தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, à®®.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ள கூட்டணியில் சி.பி.எம். அங்கம் வகிக்கிறது. அதேசமயம், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவும் இருக்கிறது. 

ஆக கூட்டணி கட்சி வாக்குகள் பலம் சேர்க்கும். à®….தி.மு.க. பிளவு, à®….à®®.மு.க. வாக்கு பிரிப்பு, ஆளுங்கட்சிகள் மீதான அதிருப்தி, கணிசமான வாக்கு வங்கி, தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வாக்குகள், சிறுபான்மையினர் வாக்குகள் உள்ளிட்டவையும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சாதகமானவை. 

எனவே, வெற்றியை எட்டி பிடிக்கும் முனைப்பில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களமிறங்குகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் வேட்பாளர் போட்டியில் பி.ஆர். நடராசன், சி.பத்மநாபன், ராமமூர்த்தி ஆகியோர் இருந்தனர். இதனிடையே, அக்கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணனை களமிறக்கலாம் என்ற பேச்சும் அடிபட்டது. அதற்கேற்ப கடந்த ஓராண்டிற்கும் மேலாக கோவையில் செயல்பாடுகளை அதிகப்படுத்தியுள்ள அவர், பல போராட்டங்களிலும் பங்கெடுத்துள்ளார். 



இதற்கு முன்னர், ஜி.ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளில் இல்லாத அவருக்கு, வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், கோவை மக்கள் அறிந்த முகமான பி.ஆர். நடராசனுக்கே வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், சென்னையில் சி.பி.ஐ. (எம்) கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கோவை தொகுதியில் பி.ஆர். நடராசன் போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இதன்மூலம், மீண்டும் கோவையில் பி.ஆர். நடராசன் களமிறங்குகிறார்.

கடந்த 1996, 2009 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் 3 முறை பி.ஆர். நடராஜன் போட்டியிட்டுள்ளார். அதில், 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மட்டும் 25.19 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

அதேசமயம், கோவையில் à®….தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. ஆக, கோவை தேர்தல் களத்தில் தாமரையை எதிர்த்து, சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் போட்டியிடுகிறது. வேட்பாளர் தேர்வும் தேர்தல் வெற்றியில் முக்கிய பங்காற்றும் என்பதால், வேட்பாளர் தேர்வில் அதிக கவனம் செலுத்தக்கூடும். எப்படி இருப்பினும் எந்த கட்சியும் எளிதில் வெல்ல முடியாது என்பதே கணிப்பாக உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், பா.ஜ.க.விற்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.கம்யூனிஸ்ட் கட்சிக்கும், பாஜகவிற்கும் இடையே கடும் போட்டி à®‡à®°à¯à®•்கும் என்பது உறுதியாகியுள்ளது.

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...