பீளமேடுக்கு 307-ம் பிறந்தநாள்

சுமார் 1311-ம் ஆண்டில் தில்லி சுல்தான் அல்லாவுடீன் கிகில்ஜியின் பிரதிநிதியாக வந்த மாலிக் கபூர் தெற்கு பகுதியை நோக்கி படையெடுத்தார்.



சுமார் 1311-ம் ஆண்டில் தில்லி சுல்தான் அல்லாவுடீன் கிகில்ஜியின் பிரதிநிதியாக வந்த மாலிக் கபூர் தெற்கு பகுதியை நோக்கி படையெடுத்தார். தேவகிரி ராஜ்ஜியம், மைசூர், வாரங்கல், துவாரசமுத்திரம் எனச் சூறையாடி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தான் மாலிக் கபூர். பின்பு அவர், தமிழ்நாட்டில் பகைவர் தடைகள் இன்றி காஞ்சிபுரம் கோயில்கள், சிதம்பரம் நடராசர் கோயில், திருவண்ணாமலை, திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் மற்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவில்களுக்கு பெருத்த சேதத்தை விளைவித்ததுடன், கோவில் செல்வங்களை கொள்ளையடித்தார் அப்போது ஆயிரக்கணக்கானவர்களையும் கொன்று குவித்தான்.13ஆம் நூற்றாண்டில் ஹரிஹரா மற்றும் புக்கா எனும் சங்கம மரபு சகோதரர்களால், வித்தியாரண்யர் என்ற அந்தண முனிவரின் துணையுடன் à®¨à®¿à®±à¯à®µà®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿà®¤à¯ விஜயநகரப் பேரரசு. 

இந்நகரம் விஜயநகரப் பேரரசின் தலைநகராக விளங்கியது. தில்லி மொகலாயப் 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் தில்லி மொகலாய பேரரசு மற்றும் தக்கானச் சுல்தான்களின் இடையறாத தாக்குதல்களாலும் 1565இல் விஜயநகரப் பேரரசு வீழ்ந்த காரணத்தால், à®µà®¿à®œà®¯à®¨à®•ரமும் பொலிவிழந்தது. தற்போது, சிதலமடைந்த விஜயநகரம் உலக பாரம்பரிய களங்களில் ஒன்றாக விளங்குகிறது.

இந்த விஜயநகரப் பேரரசால் செழுமையடைந்த கோயம்புத்தூர் பகுதியில், ரோமன் நாட்டு வர்த்தகம் நிறைவடைந்ததால், மெல்ல மெல்ல பொலிவிழந்தது. மேலும், ராணுவ முகாமை கோயம்புத்தூரில் விரிவாக்கம் செய்யப்பட்டது. வரி வசூலிப்பவர் அல்லது ஒப்பணவரவு இருந்த இடம் தற்போது, ஒப்பணக்காரவீதியாக உள்ளது. நாயக்கர்களால் நிர்வாகத்தில் பாளிகர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், மேற்கு தமிழகத்தில் அதிகளவு பாளையங்கள் உருவாக்கப்பட்டன.

500 ஆண்டுகளுக்கு முன்பு, கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள சங்கனூர் பள்ளப் பகுதிகளில் ஆந்திராவில் இருந்து கருப்புப் பருத்தி விவசாயிகள் வந்து குடியமர்ந்தனர். இதனால், கோயம்பத்தூரில் பருத்தி உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியது. ஊத்துக்குளியைச் சேர்ந்த காளிங்கரையார்களின் ஆதரவுடன் கோயம்புத்தூர் பகுதி உடையாரின் கைகளுக்கு மாறியது. 1673 முதல் 1704 ஆம் ஆண்டு வரை சிக்கடேவரராஜ் உடையார் ஆட்சி செய்தார். 

சங்கனூர் பள்ளப்பகுதிகளில் கந்திராஜா நரசர்ராஜா உடையார் ஆட்சி செய்து வந்தார். அப்போது, பெய்த கனமழையால், பருத்தி விவசாயிகள் வாழ முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், திருமலை ஐயங்காரின் ஒப்புதலுடன், புதிய தெலுங்கு கிரமாங்களாக பாப்பநாயக்கன்பாளையம் மற்றும் பீளமேடு உருவாக்கப்பட்டு, அங்கு விவசாயிகள் குடியமர்த்தப்பட்டனர்.

பூலைப் பூக்கள் அதிகம் பூக்கும் பகுதி என்பதால் பீளமேடு என்றப் பெயர் உருவானது. வறண்ட நிலங்களில் விவசாயிகள், கருப்பு பருத்தியை உற்பத்தி செய்தனர். 20 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு பிஎஸ்ஜி சகோதரர்கள் சைக்கிளைப் பயன்படுத்தி ஈரோடுக்குச் சென்று பருத்தி வர்த்தகத்தை மேற்கொண்டனர். இதன் முயற்சியாக ஸ்ரீ ரங்கா விலாஷ் மற்றும் ராதாகிருஷ்ணா மில்ஸ் உருவாக்கப்பட்டு, பீளமேடு வாசிகளுக்கு வேலை வாய்ப்புகள் குவிந்தன. 

இறுதியில், பி.எஸ். கோவிந்தசுவாமி நாயுடுவின் வாரிசுகளால் பிஎஸ்ஜி அன்ட் சன்ஸ் அறக்கட்டளை 1926-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. அவர்கள் தனது செல்வத்தில் ஐந்தில் ஒரு பகுதியை சமுதாய நனமைக்காக பகிர்ந்தளித்தனர்.



இதைத்தொடர்ந்து, இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக, முதல்முறையாக இவர்களது சர்வஜனா பள்ளியில் தான் ரபீந்தரநாத் தாகூர் இயற்றிய தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டது. பிஎஸ்ஜி மற்றும் ராதாகிருஷ்ண தொழில்நிறுவனங்கள் அதீத வளர்ச்சியடைந்ததால். தற்போது, பீளமேடு சர்வதேச அளவிலான கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி மையமாக திகழ்கிறது.



பீளமேடு பகுதி சர்வதேச மையமாகத் திகழ்வதற்கு ஒத்துழைப்பு அளித்து வரும் அத்வைத் லட்சுமி குரூப்பின் தலைவரும், தொழிலதிபருமான ரவிசேம் சார்பில் சிறிய கல்வெட்டு பொதுபூங்காவில் உருவாக்கப்பட்டுள்ளது. பீளமேட்டில் வாழ்ந்த் பருத்தி விவசாயிகளினால், தற்போது, அந்தப் பகுதிகிளில் பழமுதிர் நிலையம், விஜய் எலன்ஷா மற்றும் தொழில்நிறுவனங்கள் உள்ளிட்டவைகளால் உருவாகியுள்ளது. 

எனவே, அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது அனைவரின் கடமையாகும். பல்வேறு சிறப்புகளை கொண்ட பீளமேடு, எதிர்காலத்தில், கோயம்புத்தூரின் திருப்புமுனை பகுதியாக உருவெடுக்கும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது.


Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...