மாதவிடாய் காலத்தில் தள்ளி வைக்கப்படும் பெண்களுக்கு அடைக்கலம் தரும் குழி வீடு

கோவை: நகரச் சமுதாயம் எவ்வளவு தான் வளர்ச்சி பெற்றாலும் நமது கிராமப்புறங்கள் இன்னும் பழமை வாதத்தையும், நம்பிக்கைகளையும் விடுவதாய் இல்லை. கேரளாவின் மலை வாழ் மக்கள் கிராமத்தில் மாதவிடாய் காலத்தில் பெண்களை ஊருக்குள்ளேயே சேர்க்காத நிலை இன்னும் நீடிக்கிறது.


கோவை: நகரச் சமுதாயம் எவ்வளவு தான் வளர்ச்சி பெற்றாலும் நமது கிராமப்புறங்கள் இன்னும் பழமை வாதத்தையும், நம்பிக்கைகளையும் விடுவதாய் இல்லை. கேரளாவின் மலை வாழ் மக்கள் கிராமத்தில் மாதவிடாய் காலத்தில் பெண்களை ஊருக்குள்ளேயே சேர்க்காத நிலை இன்னும் நீடிக்கிறது.



குளச்சிவயல்

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது குளச்சிவயல் என்ற மலை கிராம். 65 வீடுகள் கொண்ட இந்த கிராமத்தில் முத்துவன் என்ற இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள பெண்கள் மாதவிடாய் காலத்தின் போது ஊருக்குள் நுழையக் கூடாது என்ற கட்டுப்பாடு இந்த கிராமத்தில் அமலில் உள்ளது. அதைவிட கொடுமையாய், எதிரில் வரும் ஆண்களின் முகத்தைக் கூட பார்க்கக் கூடாது என்ற சம்பிரதாய முறையும் கடைபிடிக்கப்படுகிறது.



வழி, வழியாய் பின்பற்றப்படுவதால், இந்தக் கொடிய கட்டுப்பாடுகளை கடைபிடிக்க அந்த ஊர் பெண்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.

குழி வீடு

அந்த நாட்களில் பெண்கள் தங்குவதற்கு என கூரையால் வேயப்பட்ட தனி வீடுகள் ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்டிருந்தது. யானைகளும், காட்டு விலங்குகளும் வாழும் காட்டில் பெண்களுக்கு இதுபோன்ற வீடுகள் அதிக ஆபத்தைத் தரும் என்பதை கேரள அரசு உணர்ந்தது.



இதனைத் தொடர்ந்து, அந்த மக்களின் பாரம்பரியத்தை புண்படுத்தாது, கூரை வீடுகளை மெத்தை வீடுகளாய் கட்டிக் கொடுத்தது கேரள அரசு. இந்த கிராமம் போலவே, பல மலைவாழ் மக்கள் வாழும் கிராமங்களிலும் இது போன்ற குழி வீடுகளை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

அறியாமை

குழி வீடுகள் மூன்று நாட்கள் வாழும் அந்த படிப்பறிவில்லா பெண்களுக்கு சானிடரி நாப்கின் உபயோகமே தெரிவதில்லை. மாறாக, அந்த குழி வீட்டுக்குள் உபயோகப்படுத்திய துணிகளை துவைத்து வைத்திருந்தனர். எங்களது துணியை எங்களால் அடையாளம் காண முடியும் என்றும் அந்த ஊர் பெண்கள் தெரிவித்தனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பராசக்தி என்ற பெண் கூறுகையில், "நாங்கள் மாதவிடாய் காலத்தில் அந்த வீட்டில் தான் இருக்க வேண்டும். அந்த வீட்டிலேயே சமைத்து அங்கேயே உண்டு, மூன்று நாட்களையும் முழுவதுமாக அங்கேயே கழிக்க வேண்டும்," என்றார். 



இத்தகைய நடைமுறைகள் அவர்களுக்கு பொருந்தாவிட்டாலும், இந்த கட்டுப்பாடுகளை இன்னும் கடைப்பிடித்து வருகின்றனர் அந்த ஊர் பெண்கள். குளச்சிவயல் கிராமத்தில் வாழும் பெரும்பாலானோர் விவசாயக் கூலிகளாகவும், 'செருப்பு' கூட அணியாத 100 நாள் வேலை வாய்ப்புத் திட்ட பணியாளர்களாகவும் தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர்.

வேண்டாத வெறுப்பாக இந்த கட்டுப்பாடுகளை பெண்கள் கடைப்பிடித்து வந்தாலும், மழைவாழ் மக்களின் வாழ்க்கை முறை, நம்பிக்கைகள் மற்றும் சம்பிரதாயங்களை புண்படுத்தாதவாறு குழி வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளது கேரளா அரசு. அந்த பெண்களின் சுகாதாரத்தைப் பேணிக்காக்கும் பொருட்டு அவர்களுக்கு சானிடரி நாப்கின்களையும், வழங்கினால் நலம். 

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...