இன்று சர்வதேச யானைகள் பாதுகாப்பு தினம் அனுசரிப்பு : வனத்தின் பாதுகாவலனாக திகழும் பிளிறும் இனங்கள்

நீலகிரி: வனத்தின் பாதுகாவலனாகவும், பிற உயிரினங்களின் தோழனாகவும் விளங்கும் யானைகளின் பாதுகாப்பு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. கோவில்களில் சேவையாற்றும் யானைகள் பொதுமக்களிடம் நேரடியாக தொடர்பு வைத்திருந்தாலும், வனப்பகுதிகளில் அவைக்கு தெரியாமலேயே பிற உயிரினங்களுக்கு உதவும் குணாதிசயத்தைக் கொண்டுள்ளளது. எனவே, யானை இனங்களைப் பாதுகாப்பதன் அவசியம் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்....


நீலகிரி: வனத்தின் பாதுகாவலனாகவும், பிற உயிரினங்களின் தோழனாகவும் விளங்கும் யானைகளின் பாதுகாப்பு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. கோவில்களில் சேவையாற்றும் யானைகள் பொதுமக்களிடம் நேரடியாக தொடர்பு வைத்திருந்தாலும், வனப்பகுதிகளில் அவைக்கு தெரியாமலேயே பிற உயிரினங்களுக்கு உதவும் குணாதிசயத்தைக் கொண்டுள்ளளது. எனவே, யானை இனங்களைப் பாதுகாப்பதன் அவசியம் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்....



ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12-ம் தேதி உலகம் முழுவதும் யானைகள் பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகில் இருக்கும் வனவிலங்குகளிலேயே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெரியும் மிருகமாகவும், மனிதர்களுடன் எளிதில் பழகக்கூடிய விலங்காகவும் யானை திகழ்ந்து வருகிறது. கருநிறத்துடன் ராட்சத வடிவில் தோற்றம் கொண்ட யானை, பிற தாவர உண்ணிகளுக்கான விதைகளை பரப்பும் காரணியாகயும் இருக்கிறது. 



யானைகள் ஒரு நாளைக்கு சராசரியாக 200 முதல் 250 கிலோ வரை உணவு உண்ண வேண்டுமானால், 20 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். யானைகளுக்கு செரிமானத் தன்மை குறைவு என்பதால், உட்கொள்ளும் உணவுகளில் 2 நாட்களுக்கு 40 முதல் 50 சதவீதம் உணவுகள் மட்டுமே செரிமானம் ஆகும். மீதி உணவு செரிமானம் ஆகாமல்தான் வெளியே வருகிறது. முக்கியமாக அது உட்கொள்ளும் விதைகள் செரிக்காமல் வருகிறது. ஒரு வனப்பகுதியில் சாப்பிட்ட விதைகள் மற்றொரு வனப்பகுதியில் வந்து விழுவதால் அங்கு தாவரங்கள் வளர ஆரம்பிக்கும். 



இதற்கு அடுத்தபடியாக கோடை காலங்களில் வறண்டு காணப்படும் ஓடைகளில் பூமிக்கு அடியில் தான் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும். ஆனால், வனப்பகுதிகளில் உள்ள எந்த விலங்குகளாலும் பூமிக்கு அடியில் ஓடும் தண்ணீரை கண்டுபிடிக்க முடியாத நிலையில், தனது தும்பிக்கையில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நரம்புகளை கொண்ட யானைகள், பூமிக்கு அடியில் தண்ணீர் செல்வதை துல்லியமாக கண்டுபிடித்துவிடும். இவ்வாறு கண்டுபிடிக்கப்படும் தண்ணீர் மூலம் மண்களை கொண்டு அதன் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள முடிகிறது. மேலும், கோடை காலத்தில் மான், புலி, சிறுத்தை போன்ற விலங்குகளுக்கு தண்ணீர் கிடைக்க யானைகள் பெரிதும் உதவியாக இருந்து வருகிறது.



மேலும், வனப்பகுதிகளில் அனைத்து தாவர உண்ணிகளுக்கும் உப்பு மண் மிகவும் அவசியமானதாக இருந்து வருகிறது. இந்த தாவர உண்ணிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு காலகட்டத்திலும் தாது உப்புகள் குறையும் போது, வனத்தில் உள்ள உப்பு மண்களை உட்கொண்டு, அதை சரி செய்து கொள்ளும். ஆனால், இந்த உப்பு மண் வனத்திற்குள் எங்கு கிடைக்கும் என்று எந்த விலங்கினாலும் கண்டுபிடிக்க முடியாத சூழலில், இந்த உப்பு மண் பூமிக்கு அடியில் சுமார் 1 முதல் 2 அடி வரையில் தான் இருக்கும்.



இந்த உப்பு மண்ணை கண்டுபிடிப்பது யானைகள் தான். எப்படி என்று பார்த்தால் தனது தும்பிக்கையில் லட்சம் நரம்புகள் இருப்பதால் அதன் நுகர்வு திறன் அதிகம். எனவே, அதனைப் பயன்படுத்தி உப்பு மண்ணை எளிதில் கண்டுபிடித்து தனக்கு தேவையான உப்பு மண்ணை உட்கொண்டு விட்டு, மீதியை அங்கேயே விட்டுவிட்டுச் சென்று விடும். இதனை, காட்டு மாடு, மான் போன்ற அனைத்து தாவர உண்ணிகளும் பயன்படுத்தி கொள்கின்றன. இவ்வாறு யானை தனக்காக ஒரு விஷயத்தை செய்யும் போது, அது வனத்தில் உள்ள அனைத்து தாவர உண்ணிகளுக்கும் பெரும் பயனை தருகிறது.



மேலும், யானைகள் வழித்தடத்தில் ஆடம்பர பங்களா, காட்டேஜ் போன்றவைகளை அமைத்து மனிதர்கள் ஆக்கிரமிப்பு செய்வதால், யானைகள் தங்களுக்கு தேவையான உணவுகளைத் தேடி விளை நிலங்களை சூறையாடுவதும், கிராமப்புறப் பகுதிகளுக்குள் புகுந்து மனிதர்களை அவ்வப்போது தாக்குதல்களை நடத்துவதால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.



எனவே, உலக யானைகள் பாதுகாப்பு தினமான இன்று தாவர உண்ணிகளுக்கும், மற்ற விலங்குகளுக்கும் உறுதுணையாக இருக்கும் யானைகளை பாதுகாப்பதில் நமது பங்கை அளிப்போம். மேலும், இதன் வழித்தடங்களை ஆக்கிரமிப்பு செய்யாமல் யானைகளை சுதந்திரமாக நடமாட வழிவகை செய்வோம் என்ற உறுதிமொழியை ஏற்போம்



Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...