தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்த முத்தமிழ் அறிஞருக்கு தமிழ் வணக்கம்!!

தள்ளாடும் வயதிலும் அரசியல் சாணக்கியன் என்ற பெயரையும், 5 முறை தமிழக மண்ணை ஆண்டவர் போன்ற பெருமைகளை உள்ளடக்கிய முத்தமிழ் கலைஞர் தனது 94-வது வயதில் சகாப்தத்தை முடித்துக் கொண்டார்.


தள்ளாடும் வயதிலும் அரசியல் சாணக்கியன் என்ற பெயரையும், 5 முறை தமிழக மண்ணை ஆண்டவர் போன்ற பெருமைகளை உள்ளடக்கிய முத்தமிழ் கலைஞர் தனது 94-வது வயதில் சகாப்தத்தை முடித்துக் கொண்டார். 

இளமைப் பருவம் : 

 

நாகை மாவட்டம் திருக்குவளை என்ற சிறிய கிராமத்தில் 1924-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி முத்துவேலர் மற்றும் அஞ்சுகம் அம்மையார் தம்பதிகளின் மகனாக பிறந்தவர் கருணாநிதி. இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தியாகும். மூன்று முறை திருமணம் செய்து கொண்ட கருணாநிதியின், முதல் மனைவியான பத்மாவதிக்கு எம்.கே. முத்து என்று ஒரு மகன் பிறந்தார். அவரது முதல் மனைவி, திருமணமான சில ஆண்டுகளிலேயே மரணமடைந்தார். கலைஞரின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாளுக்கு பிறந்தவர்களே அழகிரி, ஸ்டாலின், செல்வி மற்றும் தமிழரசு. அவரது மூன்றாவது மனைவியான ராஜாத்தியம்மாளுக்கு பிறந்தவர் தான் கனிமொழி.

தனது இளமைப் பருவத்தில் இருந்தே நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய அவர், ஒரு கோவிலில் நடன கலைஞராக இருந்தார்.

தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட கருணாநிதி, தமிழ் திரையுலகில் கதை-வசனம் எழுதுபவராக இருந்தார். அவருடைய திரை வசனங்கள் மூலம், அர்த்தமுள்ள சமூக செய்திகளை வெளிப்படுத்த முயன்றார். அவரது கதைகள் அனைத்தும், ‘விதவை மறுமணம்’,  ‘ஜமீன்தார் முறையை ஒழித்தல்’,  ‘மத பாசாங்குத்தனத்தை ஒழித்தல்’,  ‘தீண்டாமை அழிப்பு’ மற்றும் ‘சுய மரியாதை திருமணம் ஒழிப்பு’ போன்றவற்றை சார்ந்தே இருக்கும். பாரம்பரிய இந்து மத சமூகங்கள் எதிர்த்த பிராமண ஆதிக்கத்தின் எதிர்மறை அம்சங்களை, தனது படமான ‘பராசக்தியில்’ பிரதிபலித்தார். பல சர்ச்சைகள் இருந்தாலும், இப்படம் அனைத்து பார்வையாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதுவதைத் தவிர, கருணாநிதி அவர்கள், பல்வேறு கவிதைகள், கடிதங்கள், புத்தகங்கள், வரலாறு, வரலாற்று நாவல்கள், இசை, வசனம், நாடகங்கள், கட்டுரைகள், சிறுகதைகள், போன்றவற்றையும் எழுதியிருக்கிறார். 

அரசியல் வரலாறு ;

இந்தியாவில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிலவிய நீதி கட்சியின் உறுப்பினராக இருந்த அழகிரிஸ்வாமியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். ஒருமுறை, சமூகநல காரணங்களைப் பற்றிய அழகிரிஸ்வாமியின் உரையைக் கேட்ட கருணாநிதி, இளைஞர்களுக்கான உள்ளூர் சமூக அமைப்பை முதலில் உருவாக்கிய பின், சமூகப்பணி ஆதரவைப் பெற்றுத் தொடங்கினார். அவர், மாணவர்களுக்கான மாணவர் அமைப்பை, ‘தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்’ என்ற பெயரில் தொடங்கினார். இதுவே, அவர் சமூக காரணங்களில் ஈடுபட வழிவகுத்தது. 

பின்னர், 1942-ம் ஆண்டு, ஆகஸ்ட் 10-ம் தேதியன்று, அவர் தனது பத்திரிக்கையான “முரசொலியை” தொடங்கினார். அப்போது, முதல் இந்தப் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியராகவும், பதிப்பாளராகவும் இருந்து வருகிறார். எழுத்துத்திறன் கொண்ட கருணாநிதி, தனது பத்திரிகைகள் மூலமாக தனது கட்சி உறுப்பினர்கள் பற்றியும், அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைத்தார். கள்ளக்குடியில், ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கருணாநிதி ஒரு போராளியாக பங்கேற்றார். இதுவே, அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்புமுனையாக இருந்து, அவரை ஒரு முக்கிய தலைவராக உருவெடுக்க செய்தது. 

1957ல், அவர் திருச்சி மாவட்டத்திலிருந்து முதல் முறையாக மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1961-ல் தி.மு.க., கட்சியில் சேர்ந்தார், பின்னர், அதன் பொருளாளராகவும் நியமிக்கப்பட்ட அவர், அடுத்த ஆண்டே எதிர்க்கட்சி தலைவரானார். 1967-ல் திமுக கட்சி ஆட்சிக்கு வந்த போது, கருணாநிதி, ஒரு சக்திவாய்ந்த செல்வாக்கு நிலைக்கு உயர்ந்தார். 1967-ல் தமிழ்நாடு முதலமைச்சராகப் பணியாற்றிய அண்ணாதுரை, திடீர் மரணம் அடைந்ததால், பதவிப் பொறுப்பை தொடர முடியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பின், அண்ணாதுரை வகித்த முதலமைச்சர் பதவியை மு.கருணாநிதி ஏற்றார். 

அதன்பின், அவர் 1971, 1989, 1996 மற்றும் 2006-ல் மீண்டும் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தி.மு.க.,வின் ஆணிவேராக மட்டுமல்லாமல், தமிழ்நாட்டு மாநில அரசியலிலும், ஒரு முக்கிய பங்கு வகித்தார். 

சாதனைகள் மற்றும் விருதுகள் :  

1987ல் மலேசியாவில் நடந்த உலக தமிழ் மாநாட்டைக் கருணாநிதி தொடங்கி வைத்தார். 2010 க்கான ‘உலக தமிழ் செம்மொழி மாநாட்டின்’ அதிகாரப்பூர்வமான கருப்பொருள் பாடலை உருவாக்கும் பொறுப்பை ஏற்று, பாடலை இயற்றினார். அதோடு, மாநிலத்தின் வளர்ச்சிக்காக, கிராமப்புறங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இலவச காப்பீடு திட்டங்கள், தொழில்மயமாக்குதலுக்கான நடவடிக்கைகள் பலவற்றையும் மேற்கொண்டார்.

 

அண்ணாமலை பல்கலைக்கழகம், இவரை கவுரவித்து ‘டாக்டர் பட்டம்’ வழங்கியது. தமிழ் பல்கலைக்கழகம் அவரது படைப்பான “தென்பாண்டி சிங்கம்” என்ற புத்தகத்திற்கு ‘ராஜா ராஜன் விருதை’ வழங்கியது. தமிழ்நாட்டு ஆளுநரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேந்தரும் கருணாநிதிக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கிக் கவுரவித்தனர்.

மறக்கமுடியாத ஆண்டுகள் : 

1942: அவரது பத்திரிக்கை ‘முரசொலி’ நிறுவப்பட்டது.

1957: அவர் மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1961: திமுக பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1962: தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

1967: பொது நல அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

1969: முதல் முறையாக தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார்.

1970: உலகத் தமிழ் மாநாட்டின் ஒரு அங்கமாக இருந்தார்.

1971: இரண்டாவது முறையாக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1989-1991: எம். ஜி. இராமச்சந்திரன், மறைவுக்குப் பின் மூன்றாம் முறை ஆட்சியமைத்தார்.

1996:  நான்காவது முறையாக முதலமைச்சரானார்.

2006: ஐந்தாவது முறையாக மாநிலத் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் முதலமைச்சரானார்.

காலத்தை வென்ற கலைஞர் : 

5 முறை தமிழக மண்ணை ஆண்ட இந்த மைந்தனின் ஆளுமை, இனி விண்ணுலகத்தில் தொடரப்போகிறது. அதேபோல, இலக்கியவாதி, எழுத்தாளர் போன்ற பரிமாணங்களில் கலைஞர் கருணாநிதி எழுதிய கவிதைகள், நூல்கள் என்றென்றும் அவரது பெயரை ஒலித்துக் கொண்டே இருக்கும். 

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...