விளையாட்டுக்கு வயது வித்தியாசம் இல்லை : மாரத்தான் வீராங்கனை ஊர்மிளா சுரனா பேட்டி

கோவை : சிலருக்கு 5 கிலோ மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்பது சாதனையாகத் தோன்றலாம், இன்னும் சிலருக்கு 10 கிலோ மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்பது மிகப்பெரிய சாதனையாகவும் அடுத்தடுத்த தூரங்கள் செல்கையில் பெருமையும் உண்டாகும். ஆனால், பலர் தனக்கு வயதாகி விட்டது என்று இது போன்ற விளையாட்டுகளுக்கு சுயமாகவே தடை போடுவதுண்டு. ஆனால், கோவையைச் சேர்ந்த 52 வயது பெண் இந்த கோட்பாடுகளை உடைத்து வருகிறார். வயது என்பது விளையாட்டுக்கு ஒரு தடையல்ல என்று கூறி கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற உலக முதியோர் மாரத்தான் போட்டியில் இந்தியாவிற்காக தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார்.

தனது அனுபவங்கள் குறித்து அவர் நம்மிடம் கூறுகையில், " பள்ளிப் பருவத்தில் இருந்து விளையாட்டின் மீதான ஆர்வம் எனக்கு உள்ளது. எனது பள்ளிக் காலத்தை விளையாட்டு மைதானத்தில் தான் அதிகமாகக் கழித்துள்ளேன். எனது குழந்தைகளுக்கும் இதே போன்ற பருவம் வந்து சேர விருப்பம் கொள்கிறேன். கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். அப்போது கோவையில் நடைபெற்ற 10 கிலோமீட்டர் மாரத்தான் பங்கேற்றேன். அதுவே எனக்கு பெரிய சவாலாக தெரிந்தது. பின்னர், ஏன் இன்னும் அதிக தூரம் ஓடக்கூடாது? என்று எண்ணினேன். அதன்படி, 21 கிலோமீட்டர் ஓட்டப் பந்தையத்தில் பங்கேற்றேன். மேலும், எனது அதே சிந்தனையுடன் இந்த ஆண்டு 42 கிலோமீட்டர் மாரத்தான் போட்டியில் பங்கேற்றுள்ளேன். 

இன்றைய காலகட்டத்தில் வீட்டில் உள்ள பொறுப்புகள் காரணமாக பெண்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்களை வரைமுறைப் படுத்திக்கொண்டனர். அதனை விடுத்து வெளியே வந்து பெண்கள் சாதனை படைக்க வேண்டும். எனது இந்த சாதனைகளுக்கு எனது குடும்பம் தான் காரணம். அவர்கள் தான் எனக்கு ஊக்கமளித்தனர். இதுவரை இந்திய அளவில் 25-க்கும் மேற்பட்ட மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். நான் யாருடனும் போட்டி போட வேண்டும் என்ற எண்ணத்தில் இதனை செய்யவில்லை. நலமுடன் இருப்பதற்காகவே விளையாடுகிறேன்." என்றார். 

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...