இளம்வயதில் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்த கோவையைச் சேர்ந்த பெண்


கோவை, நவம்பர் 6: கோவை என்றாலே அனைவருக்கும் கண்முன் தோன்றுவது பஞ்சாலைகள், படைப்பாற்றல். மேலும், ஒரு நல்ல தொழில்நகரம், தொழில் செய்வதற்கு ஏற்ற இடம் என்பதாகும். அப்படிப்பட்ட கோவையின் தோற்றமானது, நாளுக்கு நாள் மாறிக் கொண்டே வருகிறது. கோவை மக்களிடையே படைப்பாற்றல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இங்குள்ள மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் செம்மறியாடுகளைப் போல ஒரே நடைமுறையைத் தொடராமல், தங்களுக்கு எனப் புதுப்பாதையை உருவாக்கிக் கொள்கின்றனர். 

அந்த வகையில், சிவத்மிகா என்ற 19 வயது பெண், ஆண்டனி என்ற தமிழ்ப்படத்தில் "காற்றின் காதல் காதோரம் கொஞ்சும் போது" என்ற பாடலுக்கு இசைமைத்தன் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். தற்போது, தன்னுடைய விளம்பர பிஸிக்கு மத்தியிலும், அவர் தனது இசைப் பயணம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை நம்மிடம் பகிர்ந்துள்ளார்.



இது தொடர்பாக அவர் கூறுகையில், இசை என்னுடன் எப்பவும் உள்ளது. 3 வயது முதல் கர்நாடக இசையை கற்றுக் கொண்டு இருக்கிறேன். எனது 3-ம் வகுப்பில் இருந்தே ஆங்கிலத்தில் கவிதை எழுதுவதைத் தொடங்கிவிட்டேன். நான் வளரும் போது, இசை மீதான நாட்டமும் அதிகரித்தது. எனது பள்ளி நண்பர்கள் வீட்டுப் பாடங்களை எழுதி முடிப்பதில் தீவிரம் காட்டி வந்த நிலையில், நான் பாடலுக்கு இசையமைப்பதில் ஆர்வம் காட்டி வந்தேன். 

நான் 6-ம் வகுப்பு படிக்கும் போது, முதல்முறையாக ஆங்கிலப் பாடலுக்கு இசையமைத்தேன். நான் இசைக்குடும்பத்தில் இருந்து வந்தேனா என அனைவரும் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், உண்மையில் எனது குடும்பத்தினருக்கும், இசைக்கும் எந்தவித தொடர்பில்லை. எனது தந்தை ராஜேஷ், தாய் சங்கீதா தொழிலதிபர்கள் ஆவர். 

பள்ளிப்படிப்பை முடித்த உடனே, ஏதேனும் பட்டப்படிப்பை படித்து முடிக்கும்படி எனது பெற்றோர்கள் என்னை வலியுறுத்தினர். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த நான், சென்னையில் உள்ள பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் கே.எம். இசைப்பள்ளியில் குறுகிய இசைக்கல்வியைக் கற்றேன். இதைத் தொடர்ந்து, பேஸ்புக்கின் மூலம் பல்வேறு இயக்குநர்களுக்கு எனது இசைப்பாடல்களை அனுப்பி வைத்தேன். 

இந்த நிலையில், ஒருநாள் தயாரிப்பாளர் திரு.விவேக்கிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. எனது இசைப்பாடல்கள் விவேக்கிற்கு மிகவும் பிடித்திருந்தது. வரவிருக்கும் 'ஆண்டனி' திரைப்படத்திற்கு இயக்குநர் திரு.குட்டிகுமார் புதிய இசையமைப்பாளரைத் தேடி வருவதாகவும், அவரை நேரில் சென்று சந்திக்குமாறு விவேக் என்னிடம் கூறினார். நானும் சென்று பார்த்தேன். உடனே தன்னை இந்தப் படத்தில் இசையமைக்க குட்டிகுமார் ஒப்பந்தம் போட்டார். 

இந்தப் படத்தில், 5 வகையான உணர்வு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. முன்னணி மலையாள நடிகர் லால் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார். 

திரைப்பட உலகில் ஆண்கள் இசையமைப்பாளராக உருவெடுப்பதே, ஒரு அரிதான காரியமாக இருந்து வரும் நிலையில், பெண் சமுதாயத்தினருக்கு முன்மாதிரியாக கோவை பெண்ச சிவத்மிகா இசையமைப்பாளராக அவதாரம் எடுத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...