எய்ட்ஸ் பாதிப்புக்கு இலவச வைத்தியம் பார்க்கும் கோவை டாக்டர்


கோவை, நவம்பர். 3: சாதாரண காய்ச்சல் என்று சென்றாலே பல நோய்கள் வந்துவிட்டதாக பயமுறுத்தி பணம் வசூலிக்கும் மருத்துவர்கள் இன்னும் சமூகத்தில் உலாவந்து கொண்டிருக்க 'இருப்பதை கொடுங்கள் போதும்' என்று வைத்தியம் பார்த்து மக்களை காப்பாற்றும் தெய்வங்கள் சிலர், மருத்துவர்கள் வடிவில் மண்ணில் பிறந்துள்ளனர். அந்த வகையில் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஹெச்.ஐ.வி. பாதித்த நோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவம் செய்து அவர்களுக்கென வாழ்வின் ஒரு பகுதியை அர்பணித்து வாழ்ந்து வருகிறார் கோவையில் ஒரு மருத்துவர்.

நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் மகாதேவன். மருத்துவம் பயின்ற இவர் தனது சொந்த ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்தார். ஆசிரியராக வேண்டும் என்ற கனவு இவரை கடந்த 1994-ம் ஆண்டு கோவை அரசு மருத்துவக்கல்லூரி போரசிரியராக பணியமர்த்தியது. 

மருத்துவமனைக்கு வரும் எய்ட்ஸ் நோயாளிகளின் துன்பங்களை பார்த்தும், சமூகம் அவர்களை நடத்தும் விதத்தை பார்த்தும் கலங்கிய மருத்துவர் அவர்களுக்கென ஆதரவாக இருப்பது என்று முடிவெடுத்தார். கல்லூரி நேரம் தவிர மற்ற நேரங்களில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கபட்டவர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் உதவி செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட தொடங்கினார். அன்று தொடங்கிய இவரது சேவை, இன்று வரையில் நீடிக்கிறது. 

இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹெச்.ஐ.வி. நோயாளிகள் இவரால் பயனடைந்துள்ளனர். அதோடு, இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மருத்துவத்தையும் வழங்கி வருகிறார் இந்த மருத்துவர். கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்ற இவர் தற்போது தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில் சருமம் நோய் துறையின் போராசியராக பணியாற்றி வருகிறார். ஹெச்.ஐ.வி நோய்க்கு மட்டுமன்றி எந்த வித உடல்நலக்குறைவால் இவரை பொதுமக்கள் அணுகும்போதும் அவர்களிடம் பணத்தை கேட்பதில்லை இந்த மகத்துவ மருத்துவர். காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் அமைந்துள்ள இவரது கிளினிக்-கு தினமும் மாலை நேரத்தில் à®µà®°à¯à®®à¯ à®‡à®µà®°à¯ இரவு வரை தனது மருத்துவ சேவையை தொடருகிறார். 

இது குறித்து டாக்டர்.மகாதேவன் நமக்களித்த பேட்டியில் கூறியதாவது :- 

மனிதனை மனிதனாக பார்க்காத மக்களை வளர்த்தெடுத்தது இந்த எய்ட்ஸ் நோய். இந்த நோய் ஒருவருக்கு வந்தாலே அவர் சமூகத்தில் மிகவும் தவறானவராகவும், வாழ தகுதியற்றவராகவும் சித்தரிக்கப்படுகிறார். உண்மையில் ஒவ்வொரு மனிதனும் தவறானவர் தான். சந்தர்பத்தை பொறுத்தே அவர்கள் தவறும் செய்வது நிர்ணயம் செய்யபடுகிறது. அதோடு மட்டுமல்லாமல், பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதால் மட்டும் இந்நோய் ஒருவருக்கு வருவதில்லை. கணவனிடம் இருந்து மனைவிக்கும், மனைவிடம் இருந்து குழந்தைக்கும், சுத்திகரிக்கபடாத ஊசிகளாலும், பரிசொதிக்கப்படாத  ரத்ததாலும் இந்நோய் பரவுகிறது. 

இந்நோய் பாதித்த மக்கள் மீது கனிவு காட்ட மிக சொற்பமான ஆட்களே இருந்த நேரத்தில் தான் கோவைக்கு வந்தேன். அன்று தொடங்கி ஹெச்.ஐ.வி.-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி வருகிறேன். அவர்களுக்கு தேவை வெறும் மருந்துகள் மட்டுமல்ல, அவர்களின் சுக, துக்கங்களை பகிர்ந்துகொள்ள ஒரு மனிதன். அந்த மனிதனாகத்தான் நான் வாழ்ந்து வருகிறேன். 

அதிக இளைஞர்கள் 

கோவைக்கு நான் வந்த கால கட்டத்தில் எய்ட்ஸ் பாதித்த நோயாளிகள் பெரும்பாலும் 50 வயதை கடந்தவர்களாகவே இருந்தனர். அன்று எய்ட்சால் பாதிக்கபடும் நோயாளிகளின் எண்ணிக்கை மெதுவாக வளர்ந்துகொண்டிருந்தது. 1999 என்ற காலகட்டத்தில் இந்நோயால்பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது இந்த நோயால் பாதிக்கப்படும் நபர்கள் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்துள்ளது. ஆனால், 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தற்போது எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. இருந்தாலும், நோயின் தன்மையை கட்டுப்படுத்தி 35 ஆண்டுகள் வரை வாழ வைக்க முடியும். 

அரவணைப்பு 

இந்நோயால் பாதிக்கப்பட்டவருக்கு அதிகம் தேவைப்படுவது சமூகம் தரும் ஆதரவும், அரவணைப்பும் தான். இயல்பாக அவர்களை பாவியுங்கள், பழகுங்கள். உதவி செய்யமுடியாவிட்டாலும் அவர்களை காயப்படுத்தாதீர்கள். அதே போல், இந்த கால மருத்துவர்களிடம் கூற வேண்டிய ஒன்று உள்ளது, சேவை செய்ய முடியாவிட்டாலும் நியாயமான கட்டணத்தை மட்டுமே நோயாளிகளிடம் வசூல் செய்யுங்கள். உங்கள் எதிரே அமர்ந்திருக்கும் நோயாளியின் இருக்கையில் நீங்கள் இருக்கும் போது என்ன கட்டணம் கொடுக்க à®¨à®¿à®©à¯ˆà®ªà¯à®ªà¯€à®°à¯à®•ள் என்பதை சிந்தியுங்கள். 

இவ்வாறு டாக்டர்.மகாதேவன் கூறினார். 

பணத்திற்காக வேலை செய்யும் தற்போதைய மருத்துவ சமுதாயத்தில், தனது குணத்தால் நோயாளிகளிடம் நன்மதிப்பைப் பெற்ற மருத்துவர் மகாதேவனை பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...