நகை வியாபாரத்தின் மாணிக்கம் கோவிந்தராஜலு காலமானார்


தமிழ்நாடு நகை வியாபாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் திரு.கோவிந்தராஜலு உடல்நலக்குறைவால் காலமானார். 

கோவையில் பிரபல நகை வியாபாரி பி.ஏ. ராஜு செட்டியாரின் முதல் பேரனான கோவிந்தராஜலு, தமிழ்நாடு நகை வியாபாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவராகவும், ஆலோசகராகவும் இருந்து வந்துள்ளார்.  கோவை தொழிற்நுட்பக் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிப்பை முடித்த அவர், ஒரு நல்ல கிட்டார் இசைப்பவராகவும்,  பளுதூக்கும் வீரராகவும், டென்னிஸ் விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். 

1967-ம் ஆண்டு சேலத்தை சேர்ந்த அரவிந்தகுமாரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதேவேளையில், கோவை ரோட்டரி கிளப்பில் இணைந்த அவர், அதன் 50 -வது ஆண்டில் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, 1980-ம் ஆண்டில் இருந்து கோவை நகைவியாபாரிகளின் சங்கச் செயலாளராக 20 ஆண்டுகள் பதவி வகித்தார். இவரது காலத்தில் நகை வியாபாரிகள் சந்தித்த இன்னல்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு எதிராக கடுமையாக போராடினார். 

தமிழ்நாடு நகை வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவராக இருந்த போதே, கோவை ஆர்ய வைஷ்ய சமாஜத்தின் இணை செயலாளர் பொறுப்பையும் கவனித்து வந்தார். அப்போது, கோவை ஆர்ய வைஷ்ய சமாஜத்தின் கிளினிக் மூலமாக, ரூ.1 -க்கு சிகிச்சை அளித்து வந்தார். மேலும், நகரின் மையப்பகுதிகளில் இயங்கி வந்த நகைக் கடைக்காரர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் கிடைக்கவும் அரும்பாடுபாட்டார். 

குவைத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான நகைகள் கண்காட்சியில் தமிழகத்தின் சார்பில் முதல்முறையாக கோவிந்தராஜலு கலந்து கொண்டார். எல்.எம்.டபுள்யூ நிறுவனத்தின் தலைவர் ஜெயவர்த்தனவேலு சார்பில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு படைத்த தங்க கவசத்தை உருவாக்கியவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.  

இதுபோன்ற பல்வேறு பெருமைகளை கொண்ட நகை வியாபாரத்தின் மாணிக்கம் என்றழைக்கப்படும் கோவிந்தராஜலு, தனது 72 வயதில் உடல்நலக்குறைவால், நேற்று (அக்.,26) காலமானார். அவருக்கு ராஜேஷ் மற்றும் சுரேஷ் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.  கோவிந்தராஜலுவின் மறைவிற்கு நகை வியாபாரிகள் சங்கத்தினர், ரோட்டரி கிளப் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...