புகழ்மிக்க எழுத்தாளர் அமிஷ் திரிபாதியுடனான சிறப்பு நேர்காணல்

தற்போது, மும்பையில் வசித்து வரும் எழுத்தாளர் அமிஷ் திரிபாதி, நீலகிரி மாவட்டத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார். பட்டப்படிப்பை ஐஐஎம் கொல்கத்தாவில் படித்து முடித்தார். பின்னர், வங்கித்துறையில் பணியில் சேர்ந்த அவர், புத்தகம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டார். எத்தனையோ முறை அவரை பதிப்பாளர்கள் ஒதுக்கி தள்ளினர்.இந்த நிலையில், 4 ஆண்டுகள் ஆய்வுக்கு பிறகு, தனது முதல் புத்தகத்தை 2004-ம் ஆண்டு வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, பல்வேறு புத்தகங்களை அவர் எழுதி வந்தார். 



தற்போது வாரணாசியாக இருக்கும், பெனராஸ் நகரத்தில் அமிஷ் திரிபாதியின் தாத்தா ஆசிரியராக பணியாற்றி வந்தார். இதேபோல, அவரது தந்தை திரிபாதி பொறியாளராகவும், தாய் உஷா பொருளாதார  முதுகலை பட்டப்படிப்பு படித்துள்ளார். ஆற்றல்மிகுந்த எழுத்தாளரான அமிஷ் திரிபாதி, தனது இளம் வயதில் உடற்பயிற்சியாளராகவும், குத்துச்சண்டை வீரராகவும் திகழ்ந்து வந்துள்ளார். 



இந்திய புத்தகக் கிளப் (ஐபிசி), சிந்தனையாளர்கள், இந்திய நாகரிக அடையாளத்தை பாதுகாக்க மற்றும் பண்பாட்டுடன் தேசத்தை கட்டியெழுப்பும் உரிய பங்களிப்பதுடன் ஊக்குவிக்கும் ஓர் சங்கமாகும்.  ஐபிசி இந்திய மேம்பாட்டிற்கும், இந்தியாவில் பல்வேறு நகரங்களில் ஆசிரியர்கள், தங்கள் புதிய வெளியீடுகள் புத்தகத்தை வெளியிட ஏற்பாடு செய்கிறது.  



இந்த நிலையில், எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை மற்றும் இந்திய புத்தக கிளப் கோயம்புத்தூர் இணைந்து அமிஷ் திரிபாதியின் ”அழியாத இந்தியா”  புத்தகம் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி எஸ்என்ஆர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்திற்க்கும் மேலான மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.  எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அரங்காவலர் டி. லக்ஷ்மி நாரயணசாமி அனைவரையும் வரவேற்றார். முதன்மை வர்த்தக அலுவலர் ஸ்வாதி ரோஹித், அமிஷ் திரிபாதியை அறிமுகம் செய்து வைத்தார். 



தனது புத்தகம் குறித்து அமிஷ் திரிபாதி பேசுகையில், நமது உலகம் பல்வேறு கதைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. பண்டைய இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்றதை போல, தற்போது நம்மை மாற்றிக் கொள்வது என்பது அரிதான ஒன்று. பழங்கால வரலாறுகளில், பல உண்மைகளும், நம்பத்தகுந்த செய்திகளும் உள்ளன. இந்தியா யாத்ரீகர்களுக்கான நடவடிக்கைகளை உருவாக்கி வருவதாக டையானா கூறியதை ஆதரிக்கிறேன்



இந்தியாவில் கோயில்களை அலங்கரித்த பல்வேறு தலைவர்கள் வெளி உலகிற்கு தெரிவதில்லை. குறிப்பாக, லட்சித்பர்புகான், ராணி அபாக்கா, அஹல்யா பாய் ஹோல்கர், மார்த்தாண்ட வர்மா, பாஜி ராவ் உள்ளிட்ட பலர் குறிப்பிடத்தக்கவர்கள். இதன்மூலமாக பக்தியில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தாலும், வடமேற்கு பகுதியில் சிறந்த வீரர்களான பதான் இன மக்களின், ஊடுருவல் தடுப்பு முயற்சி தோல்வியில் முடிந்தது. அஹோம் இன மக்கள் வடகிழக்கு பகுதி வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவினர். 

நாட்டின் கலாச்சாரம் தொடர்பாக அவர் பேசுகையில், நெடும் போருக்கு பிறகு கலாச்சாரங்கள் சிறிது மாறுபட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டில் உள்ள மக்களும், பழங்கால கலாச்சாரத்தால் ஒருமுறையாவது பாதிக்கப்பட்டிருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...