பழமை மாறாமல் புனரமைக்கபட்ட ‘ஹாமில்டன் போலீஸ் கிளப்’ அன்றும்! இன்றும்!

கோவை நகரில் வரலாற்று நினைவுகளாக பல இடங்களில் பழமை வாய்ந்த கட்டிடங்கள் உள்ளன. அதில் ஒன்று ரயில் நிலையம் எதிரே உள்ள ‘ஹாமில்டன் போலீஸ் கிளப்’. 


இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்,1918-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி எப்.ஏ.ஹாமில்டன் என்ற ஆங்கிலேயே காவல்துறை அதிகாரி இந்த கட்டிடம் ரூ.20 ஆயிரம்  விலைக்கு வாங்கியுள்ளார். அப்போதே மெட்ராஸ் பேங்க் எனப்படும் வங்கிக்கு காசோலை செலுத்தி இந்த கட்டிடம் விலைக்கு வாங்கப் பட்டுள்ளதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஹாமில்டன் துரையுடன் இந்த கிளப்பின் பலர் நிர்வாகத்தில் இருந்துள்ளதும் ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.



பொறியியல் நுணுக்கத்தில் இந்த கட்டிடம் சுமார் 16 அறைகள், டேபிள் டென்னிஸ் அரங்கம், நூலகம், பெரிய சமையலறை என சகல வசதிகளும் உள்ளன. இதற்கென எழுதப்பட்ட விதிமுறைகள் கூட உள்ளன. 



அதற்கான ஆவணங்கள் பல சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டன. நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் சட்டப் புத்தகங்களும் மீட்கப்பட்டுள்ளன. சுமார் 2 அடி தடிமனுள்ள சுவர்கள், 12 அடி உயரம் கொண்ட அறைகள், காற்றோட்டமிக்க கட்டமைப்பு என நுணுக்கமான பொறியியல் தொழில்நுட்பம் இந்த கட்டிடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 







எனவே, இந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த ‘ஹாமில்டன் போலீஸ் கிளப்’ கட்டிடத்தை பழமை மாறாமல் புனரமைக்க, மாநகர போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.



இந்த கிளப் அருகே மாநகர போலீஸ் நிர்வாகத்திற்கு சொந்தமான தங்கும்விடுதி உள்ளது. இந்த விடுதி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கூடிய இந்த விடுதியில் மொத்தம் 18 அறைகள் உள்ளது. மாநகரில் பணியாற்றும் வெளியூர் பகுதிகளை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள், பாதுகாப்பு பணி, நீதிமன்றத்திற்கு குற்றவாளிகளை அழைத்து வரும் போலீசார் போன்றோர் இந்த விடுதியில் தங்கி வந்தனர். இதற்காக இந்த விடுதியில் ஒரு நாளைக்கு ரூ.150 வாடகை பணம் வசூலிக்கப்பட்டு வந்தது. குறைந்த கட்டணம் என்பதால் ஏராளமான போலீஸ் அதிகாரிகள், போலீசார் இந்த கட்டடத்தை அதிகளவில் பயன்படுத்தி வந்தனர்.



ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த தங்கும் விடுதியின் பராமரிப்பு குறைபாடு காரணமாக, இங்கு வந்து தங்கும் போலீசாரின் எண்ணிக்கை குறைந்தது. தற்போது ஒரு சில போலீஸ் அதிகாரிகளே குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை இங்கு வந்து தங்குகின்றனர். போலீஸ் அதிகாரிகள் தங்குவதற்கு தனியாருக்கு சொந்தமான லாட்ஜ், ஓட்டல்கள் போன்றவற்றை பயன்படுத்தும் சூழ்நிலையும் ஏற்பட்டது. மாநகர போலீஸ் நிர்வாகத்திற்கு சொந்தமான, பராமரிப்பில்லாமல் காணப்படும் இந்த தங்கும்விடுதியை சீரமைக்க மாநகர போலீஸ் அதிகாரிகளுக்கு போலீசார் சார்பில் வலியுறுத்தப்பட்டது. 



இதையடுத்து, பராமரிப்பில்லாமல் இருந்த போலீஸ் தங்கும் விடுதி கட்டடத்தை ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்க மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த சில நாட்களாக இந்த தங்கும்விடுதி கட்டிடம் சீரமைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் உள்ள பழுதடைந்த கதவுகள் மாற்றும் பணி, இருக்கைகள், படுக்கை விரிப்புகள் மாற்றும் பணி, அறையில் உள்ள மின்விசிறி, தொலைக்காட்சிபெட்டி போன்ற மின்சாதனங்கள் மாற்றும் பணி போன்றவை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் சீரமைப்பு பணி இம்மாத இறுதிக்குள் முடிவடையும். அதன்பின், போலீசாரின் பயன்பாட்டிற்கு விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...