மாற்றுத்திறனாளி என்னும் தடையுடைத்து தேசிய அளவில் சாதனைபடைக்கும் கோவை தர்ஷிணி


மாற்றுத்திறன் என்பது உடலில் மட்டுமே மனதில் இல்லை என்ற ஒற்றைக்கோட்பாட்டின் மூலம் தனக்கிருந்த குறையினையும் உடைத்தெரிந்து சாதனைகள் பல படைத்துவருகிறார் கோவையைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு படிக்கும் தர்ஷிணி. கபடியில் தமிழகத்திற்காக இவர் பெற்றுத்தரும் ஒவ்வொரு வெற்றிகளும் இவரது பெயரை ஒளிக்கின்றன என்றால் அது மிகையாகாது.

வறுமையும், மாற்றுத்திறனும்தான் ஊக்கத்தை கொடுத்து கபடி போட்டிகளில் மாவட்ட, மாநில அளவில் பல்வேறு வெற்றிகளை பெற உதவியதாக கூறுகிறார் மாணவி தர்ஷிணி.

தனது ஏழு வயதில் ஒரு சில வார்த்தைகளை மட்டுமே பேசும் திறனுடையவராக இருந்துள்ளார். தனது இக்குறையினை நனைத்து வாடிய தாய்க்கு நான் பேசுவேன் என்று ஊக்கத்தை கொடுத்து விளையாட்டின் மூலம் தனக்கிருந்த குறையினையும் முடக்கியுள்ளார் கோவை ராஜா வீதியிலுள்ள துணிவணிகர் மேல்நிலைப்பள்ளியில் பதினொண்றாம் வகுப்பு ஹோம் சயின்ஸ் பிரிவில் படிக்கும் தர்ஷிணி.

தாய் ஜெயந்தி, தந்தை பாலகிருஷ்ணன் காதல் திருமணம் செய்துகொண்டு திருச்சியில் இருந்து கோவைக்கு குடியேறியுள்ளனர். கூலிவேலை செய்து வரும் இருவரும் வருகின்ற சொற்ப வருமானத்தை வைத்துக்கொண்டு, மூன்று பிள்ளைகளையும் படிக்க வைக்கின்றனர்.

தர்ஷிணியும், சம்பத்தும் மாற்றுத்திறன் உடையவர்கள். இவர்களது அண்ணன் பட்டயபடிப்பு படித்துவிட்டு வேலைக்கு சென்றுகொண்டிருக்கிறார். தனது வீட்டருகில் யோகா கற்றுக்கொடுக்கும் ஈஸ்வரி மூலம் யோகா பயிற்சியினை முடித்து மாவட்ட அளவில் வெற்றி பெற்றிருக்கிறார் தர்ஷிணி.

இவரது திறமையை பார்த்த யோகா ஆசிரியரின் கணவரும் கபடி பயிற்சியாளருமான கிருஷ்ணன், தர்ஷ்ணிக்கு முறையாக கபடி பயிற்சியை இலவசமாக அளித்துள்ளார்.

இதனால் மாவட்ட, மாநில போட்டிகளில் விளையாட ஆரம்பித்த தர்ஷிணி, தன்னுடைய 13 வயதில் மகாராஸ்டிரா மாநிலம் சாட்னாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கபடி போட்டியில், தமிழக அணிக்காக முக்கிய ஆட்டத்தில் 23 புள்ளிகள் எடுத்து அணியை வெற்றி பெற செய்துள்ளார்.

இந்த ஆட்டத்தைப் பார்த்த தேர்வாளர்கள் தேசிய அணிக்கு இவரை தேர்வு செய்துள்ளனர். சொந்தக்காரர்களின் தூண்டுதலின் பேரில் பெண்ணை தேசிய போட்டியில் பங்கேற்க அனுப்பாதே என கட்டாயப்படுதியதால், தர்ஷிணியின் பெற்றோர்கள் அவரை அனுப்பாமல் இருந்துள்ளனர். இதனால் ஒரு வாரம் வரை சாப்பிடாமல் இருந்துள்ளார் தர்ஷிணி.

அடுத்த ஆண்டும் இது தொடர்கதையானது. இந்த ஆண்டு எப்படியும் தேசிய அணிக்காக விளையாட முடியும் என்ற நம்பிக்கையோடு மனம் தளராமல் கடின பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். ஓரிரு வார்த்தைகளை தவிர செய்கையால் மட்டுமே பேசி வந்த தர்ஷிணி, கபடி பயிற்சி பெற ஆரம்பித்ததிலிருந்து மருத்துவசெலவு இல்லாமல் நன்றாக பேசுவதாகவும், அவளுக்கு நம்பிக்கையோடு, உற்சாகத்தையும் விளையாட்டின் மேல் தீராத காதலையும் ஏற்படுத்தியிருப்பது எங்களுக்கு அவள் மேல் இருந்த அச்சத்தை போக்கியுள்ளதாக அவரது தாய் ஜெயந்தி தெரிவித்தார்.

தற்போது தேசிய அளவிலான கபடி போட்டிகளில் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வரும் தர்ஷிணி, தான் பங்கேற்ற போட்டிகளில் தமிழக அணிக்கு அதிக அளவில் புள்ளிகள் பெற்று தந்துள்ளார். 

ஒடிசாவிற்கு எதிரான போட்டியில் தமிழக அணி 68- 11 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. இதில் தர்ஷினி 12 புள்ளிகள் எடுத்துள்ளார். விதர்பா அணிக்கு எதிராக (52- 12) இதில் 20 புள்ளிகளும், பாண்டிச்சேரி அணிக்கு எதிராக (32-4), இதில் 18 புள்ளிகளும் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். 

மேலும் தேசிய அளவிலான இன்று நடைபெறும் சப்-ஜூனியர் அரை இறுதி போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி பெறவும் தமிழகத்திற்கு பெறுமை சேர்க்க தர்ஷினியை வாழ்த்துவோம்.

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...