ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து டாக்டர். நந்திதா கிருஷ்ணா அவர்களின் சில பகிர்வுகள்!


தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையினை நிரந்தரமாக நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 8 நாட்களுக்கும் மேலாக மாணவர்கள், இளைஞர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் தன்னெழுச்சியான இப்போராட்டத்தைத் தொடர்ந்து பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என ஏராளமானோர்  à®ªà¯‹à®°à®¾à®Ÿà¯à®Ÿà®•்களத்தில் ஒன்றிணைந்தனர்.

இதனைத்தொடந்து, ஜல்லிக்கட்டு மீது அவசரச் சட்டம் இயற்றப்பட்ட பின்பும் நிரந்தரச்சட்டம் வரும் வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் அறிவித்தனர்.

தமிழக மக்களின் இந்த அறப்போராட்டத்தினைத் தொடர்ந்து நேற்று காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியதும், அதில் பலர் உயிரிழந்திருப்பதும், படுகாயமடைந்திருப்பதும் தமிழகத்தில் தற்போது அசாதாரன சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்களால் ஜல்லிக்கட்டிற்காக நடைபெற்ற இந்த உணர்வுப்பூர்வமான, ஒரு புரட்சிகர போராட்டமானது தற்போது வரலாறு சிறப்பு மிக்கதாக மாறியுள்ளது.

இந்த ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து ஜல்லிக்கட்டு மீது தடைவிதிப்பிற்கு காரணமான சென்னை சி பி ஆர் பவுன்டேஷனின் இயக்குநர் டாக்டர் நந்திதா கிருஷ்ணா சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். தற்போது உள்ள சூழ்நிலையில் அவரிடம் கருத்து கேட்பதும் நமக்கு அவசியமாகிறது. இது இப்பிரச்சனை குறித்து நாம் மேலும்  à®ªà¯à®°à®¿à®¨à¯à®¤à¯à®•ொள்ள வழிவகுக்கும்.

டாக்டர். நந்திதா கிருஷ்ணா ஒரு சிறந்த இந்தியவியலாளர், வரலாற்றாசிரியர், சுற்றுச் சூழல் ஆர்வலர், அடிப்படையில் சென்னையில் ஒரு எழுத்தாளர் ஆவார்.

நந்திதா கிருஷ்ணா தமிழ்நாடு முழுவதும் சூழ்நிலையியல் பாரம்பரியத்தை ஆவணப்படுத்துவதில் முன்னோடியாக விளங்குகிறார். நந்திதா கிருண்ணா தற்போது வரை 50 புனித தோப்புகளை மீட்டெடுத்துள்ளார். அவர் இதுவரை பல புத்தகங்களை பதிப்பித்துள்ளார். அவை SACRED ANIMALS OF INDIA, ARTS AND  CRAFTS OF TAMILNADU,FOLK ARTS OF TAMILNADU , MADRAS THEN CHENNAI NOW,THE BOOK OF VISHNU ஆகும். மேலும் அவர் பேராசிரியராக இருந்து மெட்ராஸ் பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளார். நந்திதா கிருஷ்ணா பல தேசிய விருது மற்றும் சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார்.

அவரது கொள்ளுத்தாத்தா திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் திவானாக பணியாற்றினார். அவரது தாத்தா சி.ஆர்.பட்டாபிராமன் மத்திய அரசின்  à®…மைச்சராக செயல்பட்டுள்ளார். தாயார் சகுந்தலா ஜெகன்நாதன் இந்து மதம் குறித்து பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். 

ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து ராஜேஷ் கோவிந்தராஜலுவிடம் டாக்டர்.நந்திதா கிருஷ்ணா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நந்திதா கிருஷ்ணா மற்றும் அவரது கணவர் சின்னி கிருஷ்ணா ஆகியோர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து ராஜேஷ் கோவிந்தராஜலு கேள்வி கேட்டபோது, 

ராஜேஷ் கோவிந்தராஜலு: நீங்கள் பீட்டாவுடனோ அல்லது வேறு ஏதேனும் விலங்கு நல அமைப்புடனோ எந்த விதத்திலாவது தொடர்பில் உள்ளீர்களா?

நந்திதா கிருஷ்ணா: எனக்கும், எனது கணவருக்கும் பீட்டாவுடன் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் புளு கிராஸ் அமைப்புடன் மட்டுமே தொடர்பு வைத்துள்ளோம். அதன் மூலம் விலங்குகளுக்கான ஆம்புலன்ஸ் வசதிகளையும், விலங்குகளுக்கு இருப்பிடம் அமைத்துத் தருவதிலும் ஈடுபட்டுள்ளோம். எங்கள் வீட்டில் நாங்கள் பல விலங்குகளுக்கு பாதுகாப்பு அளித்துள்ளோம். சென்னை வெள்ளத்தின் போது 13 ஆயிரம் மனிதர்களையும், 10 ஆயிரம் விலங்குகளையும் படகு மூலம் மீட்டுள்ளோம்.

ராஜேஷ் கோவிந்தராஜலு: நீங்கள் ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்டுள்ள தடைக்கு நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ காரணமாக இருந்தீர்களா ?

நந்திதா கிருஷ்ணா: எனக்கு இந்த வழக்கில் எவ்வித தொடர்பும் இல்லை. நான் இவ்விசயத்தில் பங்குகொள்ளவும் இல்லை. எனக்கு அதற்கான அதிகாரமும் இல்லை. கடந்த காலத்தில் எங்களது அமைப்பு என்னால் இயற்றப்பட்ட SACRED ANIMALS OF INDIA என்ற புத்தகத்திற்காக பணி செய்துள்ளது. கடந்த பல ஆண்டுகலாக இந்திய கலாச்சாரத்தை குறிப்பாக தமிழ் கலாச்சாரத்தை பரப்புவதற்காக நாங்கள் முயற்சித்து வருகிறோம். இதுசம்பந்தமான என்னுடைய புத்தகங்களும், ஆராய்ச்சி அறிக்கைகளும் பொதுவெளியில் எல்லோரும் பார்க்கும் வகையில் உள்ளது. பென்குயின் பதிப்பகம் போன்ற முன்னணி பதிப்பகங்கள் என்னுடைய புத்தகங்களை பதிப்பித்துள்ளார்கள்.

ராஜேஷ் கோவிந்தராஜலு: உங்களது மற்ற செயல்பாடுகள் குறித்து எங்களுக்கு கூற முடியுமா ?

நந்திதா கிருஷ்ணா: நாங்கள் காஞ்சிபுரத்திலும், கும்பகோணத்திலும் பள்ளிகள் நடத்தி வருகிறோம். இந்த பள்ளிகள் மூலம் 1000த்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்வி வழங்கி வருகிறோம். அதுமட்டுமல்லாமல் சென்னையில் ஆயிரம் குழந்தைகளுக்கு அவர்களாகவே கல்வி கற்றுக்கொள்ளும் வகையில் உதவி வருகிறோம். 

மனவளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளுக்காக ஒரு அமைப்பை சென்னையில் நடத்தி வருகிறோம். எங்களது சுற்றுசூழலுக்கான அமைப்பின் மூலம் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். பழைய கிராமக் கோவில்கள் மற்றும் கோவில் நந்தவனங்களை புதுப்பித்துள்ளோம்.

ராஜேஷ் கோவிந்தராஜலு: தாங்கள் கூறுவதைக் கேட்க மிகவும் ஆர்வமாக உள்ளது. ஜல்லிக்கட்டு குறித்து என்ன நினைக்கிறீர்கள் ?, நமது நாட்டில் அதனை விளையாடலாமா ?, நம்முடைய புராணங்களிலும், வரலாற்றிலும் இடம் பெற்றுள்ள ஜல்லிக்கட்டு விளையாட்டு குறித்து என்ன நினைக்கிறீர்கள் ?

நந்திதா கிருஷ்ணா: ஜனநாயக நாட்டில் மக்களின் குரலே முக்கியம். மக்கள் கருத்தின் மீதான ஜனநாயகத்தின் 4 தூண்களின் எதிர்வினைதான் முக்கியம். பேச்சுவார்த்தை, விவாதம், வாதம், கருத்துகள் மற்றும் அறப்போராட்டம் அனைத்தும் மக்கள் கருத்தின் ஒரு அங்கமாகும். அனைவரின் கருத்தை கேட்பது மிகவும் முக்கியமானதாகும். மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து ஆட்சியாளர்கள் முடிவெடுக்க வேண்டும். சட்டங்கள் மக்கள் மகிழ்ச்சிக்கே உருவாக்கப்பட்டது. அது மிகவும் முக்கியமானதாகும். 

ஜல்லிக்கட்டு என்பது பாரம்பரிய இந்திய விளையாட்டு. அது தொடர்வது பொதுமக்கள், அதை சார்ந்தவர்களின் ஆதரவில் தான் உள்ளது.

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...