சாதனையும், சேவையுமே லலித் நடராஜனின் நோக்கம்

37 வயதானவர் சாதனை இளைஞர் மற்றும் பன்முகத் தன்மை கொண்ட லலித்குமார் நடராஜன். தந்தை நடராஜன், தாய் à®•ிருஷ்ணவேணி, சகோதரர் அருண் ஆகியோரே இந்த சாதனை வாலிபரின் குடும்பத்தினர். திருப்பூரைச் சேர்ந்த இவருக்கு 11 à®µà®¯à®¤à®¿à®²à¯ தான் அவரது வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது. லலித்தின் முதுகெழும்பில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையினாலேயே அவரால் நடக்க முடியாமல் போனது. அதில் இருந்து இருசக்கர நாற்காலியின் உதவியுடனேயே தனது சாதனைகளை தொடங்கியுள்ளார். 

தன்னுடைய பள்ளிக் கல்வியை திருப்பூர், கோவை மற்றும் உதகையில் ப்ரிக்ஸ் பள்ளியிலும் மேற்கொண்டு பின் வீட்டிலேயே தனது படிப்பை முடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பிபிஏ, ஐசிஎப்ஏஐ-யில் எம்பிஏ படித்து பின் எம்பில் பட்டம் பெற்றுள்ளார்.

எப்போதும் சுருசுருப்புடன் இருக்கும் லலித் நடராஜன் ஏர் ரைபில் சுடும் போட்டியில் வல்லமை படைத்தவர். மதுரை மற்றும் கோவையில் நடைபெற்ற போட்டிகளில் போட்டியாளர்களை பின்னுக்குத்தள்ளி பரிசுகளை தட்டிச்சென்றவர். 

இதுகுறித்து லலித் நடராஜன் கூறியதாவது:-

எனக்கு நடமாட முடியாமல் உள்ளவர்களுக்கு உதவ மிகவும் ஆர்வம். நடக்கமுடியாமல் ஊணமுற்றோர்க்கு என 4 à®¤à®¿à®Ÿà¯à®Ÿà®™à¯à®™à®•ளை உருவாக்கியுள்ளேன். மேலும், நாங்கள் மாதந்தோரும் 75 பேருக்கு இந்திட்டத்தால் உதவி வருகிறோம். 

அதுமட்டுமின்றி எங்கள் தன்னார்வ தொண்டு அமைப்பின் மூலம் ஊணமுற்றோர்க்கு என ஜெல், உபகரணங்கள் மற்றும் à®®à®°à¯à®¤à¯à®¤à¯à®µ சேவைகளை வழங்கி வருகிறோம். மேலும், சக்கர நாற்காளி, பிரத்யேக படுக்கை உள்ளிட்டவற்றையும் வழங்கி உதவி செய்து வருகிறோம். 

அன்மையில் கௌகாத்தி சென்று வந்தேன். அங்கே ஒரு குழுவினை உருவாக்கி வடகிழக்கு மாநிலங்களில் ஊணமுற்றோர்க்கு உதவ முடிவு செய்துள்ளேன். நான் நேஷனல் டிரஸ்ட் என்னும் அமைப்பிலும் உறுப்பினராக உள்ளேன். இந்த அமைப்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் உட்பட மூன்று நபர்கள் இருப்பர். அதில், ஆட்சியர், ஒரு பிரதிநிதி மற்றும் உடல் ஊணமுற்றோர் ஒருவர் இருப்பர். மேலும், நான் மனிதவள மேம்பாட்டு துறையிலும் ஆலோசனை உறுப்பினராக செயல்பட்டு வருகிறேன். அதில் இருந்து பெறப்படும் வருமானம் மற்றும் குடும்ப, நண்பர்கள் மூலம் மற்றவர்களுக்கு உதவி வருகிறேன். உடல் ஊணமுற்றோர்க்கு வாழ்வில் மறு வாய்ப்பினை உருவாக்கி வருகிறேன்'' என்றார்.

சேவை மனப்பான்மைபடைத்த இளைஞரான லலித் நடராஜன் இளமை இந்தியன் (Young Indians) அமைப்பின் திருப்பூர் மாவட்ட à®‰à®±à¯à®ªà¯à®ªà®¿à®©à®°à®¾à®•வும் தனது சேவையை தொடர்ந்து வருகிறார். கோவை டெக்கத்தலோனில் இருசக்கர நாற்காளி பந்து எரிதல் போட்டியையும் ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார். இதன் மூலம் வெளியுலகிற்கு வர முடியாத, வரத் தயங்கும் ஊணமுற்றோர்க்கு ஊக்கமளித்து தன்னம்பிக்கையை தூண்டி அவர்களுக்கு போக்குவரத்து வசதியையும் ஏற்படுத்தி à®µà®¿à®³à¯ˆà®¯à®¾à®Ÿà¯à®Ÿà®¿à®²à¯ ஆர்வத்தினை ஏற்படுத்தி வருகிறார். 

மதுரையில் விரைவில் நடைபெறவுள்ள துப்பாக்கி சுடும் போட்டியில் பங்குபெற தயாராகி வரும் லலித் நடராஜன், தொடர்ந்து தேசிய அளவில் உடல் ஊணமுற்றோர்கள் குறித்து புள்ளி விபரம் சேகரிக்கும் நோக்கம் உள்ளதாகவும் தெரிவிக்கிறார். 

இதுகுறித்தான மேலும் தகவலுக்கும், உதவிபுரியவும் விருப்பமுள்ளவர்கள் 09487836960 என்ற தொலைபேசி எண்அல்லது [email protected] à®®à®±à¯à®±à¯à®®à¯ www.loveandacceptance.org à®‡à®£à¯ˆà®¯à®¤à®³à®¤à¯à®¤à¯ˆà®¯à¯à®®à¯ தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...