மகிழ்ச்சிக்காக உருவாக்கப்படும் உயிரைக்கொல்லும் பட்டாசுகள்!

திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரன் என்ற அரக்கனை கொன்ற தினத்தினை, நரகாசுரனின் இறுதி ஆசைப்படி கொண்டாடுவதே தீபாவளி திருநாளாகும். 
இதனை மகிழ்ச்சியுடனும், அரக்கர்களை தீயிட்டு எரிக்கவும் உருவானதே பட்டாசுகள். 

ஆண்டுதோறும், தீபாவளி அன்று வகைவகையான பட்டாசுகளை வாங்கி வெடிப்பதன் மூலமே தீபாவளி தினம் நிறைவுபெறுகிறது. மேலும் தற்போது, பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகளுக்கும் வெடிபொருட்களை வெடித்து மக்கள் மகிழ்கின்றனர். ஆனால் அவ்வாறு வெடிக்கப்படும் பட்டாசுகளின் பின்னணியில் எத்தனை உயிரிகள் பலியாகின்றன என்பது குறித்து யாரும் எண்ணிப்பார்ப்பது இல்லை. 

ஆண்டு முழுவதும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஏராளமானோர் அதன் அபாயகரமான மருந்தினாலோ அல்லது வெடிவிபத்தினாலோ இறந்துகொண்டேதான் உள்ளனர். 

உதாரணத்திற்கு, தற்சமயம் விழுப்புரம் அருகே வானூர் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 பேர் இறந்தனர். இந்த சம்பவம் மாவட்டத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவ்வாறாக ஆண்டுதோறும், பட்டாசு தொழிற்சாலையில் ஏராளமான தொழிலாளர்கள் உயிரிழப்பது அவ்வப்போது ஒரு செய்தியாக பேசப்பட்டு  வருகிறது. 

பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரிவோர்க்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், அவர்களின் உயிர்க்கு உத்திரவாதம் கொடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் குரல்கொடுத்தாலும் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவது இல்லை. 

இந்த தொழிற்சாலையில் பணிபுரிவோர் கையுறைகள் எதுவுமின்றி பணிபுரிகின்றனர். மேலும், அந்த வெடிபொருளான துகள்கலையே அவர்கள் சுவாசிக்கின்றன. இது அவர்களுக்கு சுவாசக்கோளாறு, நுரையீரல் பாதிப்பு, கேன்சர் உள்ளிட்ட பிரச்சனைகளையும் ஏற்படுத்தி விடுகிறது. குழந்தைகளும் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவதால் குறுகிய காலத்திலேயே அவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். 

இதுபோன்று, உயிரை பனையம் வைத்து தயாரிக்கப்படும் பட்டாசுகளை வெடிப்பதன் மூலமும் எவ்வித பயனும் ஏற்படுவது இல்லை. மாறாக அது, காற்று மாசு, ஒலி மாசு என சுற்றுப்புறத்திற்கு கேடுவிளைவிப்பதாகவே உள்ளது. வெடிபொருட்களின் அளவுக்கு அதிகமான சத்தம் மனிதரின் கேட்கும் திறனையே கெடுத்து விடுகிறது. இந்த சத்தத்தால் பல்வேறு பறவை இனங்களும் அழிந்து விட்டது, மேலும் அழிந்து வருகிறது.

தீபாவளி என்பது யாரையும் கொன்று மகிழ்வது அல்ல. பெரும்பாலான உயிர்களை கொன்று, மாசினை ஏற்படுத்தி வரும் வெடிபொருட்களை தவிர்த்து, அனைவரிடத்திலும் அன்பை பரிமாற்றிக்கொண்டு, சுற்றுப்புறத்திற்கு எவ்வித கேடும் விளைவிக்காமல் திருநாட்களை கொண்டாடுவோம்.

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...