கோவையில் அனைந்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரிலான புதிய கட்சியின் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்


ஜெயலலிதாவின் சொத்துக்களை கைப்பற்றுவது தீபாவின் நோக்கம் அல்ல எனவும் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட கட்சியை மீட்பது மட்டுமே அவரது நோக்கம் என தீபாவின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.



ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா விரைவில் புதிய கட்சியை துவங்குவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கோவையில் அனைந்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரிலான புதிய கட்சியின் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுதர்சன் கூறும் போது ஜெயலலிதாவின் சொத்துக்களை கைப்பற்றுவதற்காக தீபா புதிய கட்சியை துவங்கவில்லை எனவும் அதற்கு சட்டரீதியான நடவடிக்கைகளே போதும் எனவும் தெரிவித்தார். எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அதிமுகவையும் அதன் சின்னமான இரட்டை இலையை மீட்பதுமே புதிய கட்சி துவங்குவதற்கான நோக்கம் எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.

கட்சிக்கு வர அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் ஆர்வமாக இருப்பதாகவும் கட்சி துவங்கிய பின்னர் பல மூத்த தலைவர்கள் கட்சியில் இணைவார்கள் எனவும்  அவர் அப்போது நம்பிக்கை தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் முதற்கட்டமாக 4 லட்சம் பேர் இதுவரை புதிய கட்சியில் இணைந்துள்ளதாக கூறிய அவர் தமிழகம்  முழுவதும் எவ்வளவு பேர் இணைந்துள்ளனர் என்ற கணக்கை விரைவில் வெளியிட  உள்ளதாகவும் தெரிவித்தார். 

முன்னதாக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வெளியிட்ட அவர் கோவை மாவட்ட நிர்வாகிகளையும் அறிமுகம் செய்து வைத்தார். அதிமுகவின் தலைமை மையமான பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா வந்ததை அடுத்து முக்கிய நிர்வாகிகள் பலர் அதிருப்தி வெளியிட்டு வரும் நிலையில் எதிர்தரப்பான தீபா தரப்பு உறுப்பினர் சேர்க்கை வரை விரைவாக செயல்படுவது அரசியல் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...