2481 பயனாளிகளுக்கு ரூ.12.80 கோடி மதிப்பில் தாலிக்கு தங்கத்துடன் திருமண உதவிதொகை


கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழக கலையரங்கத்தில் சமூக நலத்துறையின் மூலம் பத்தாம் வகுப்பு, பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு படித்த ஏழைப்பெண்களுக்கு திருமணத்திற்கு தாலிக்கு தங்கத்துடன் திருமண உதவித் தொகை வழங்கும் விழாவில் தமிழக சட்டபேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தலைமையில் நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 2481 பயனாளிகளுக்கு ரூ.12.80 கோடி மதிப்பீட்டில் தாலிக்கு தங்கத்துடன் நிதியுதவிகளை வழங்கினார்.

 

இவ்விழாவில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில்;

அம்மா அவர்கள் வறுமை  கோட்டிற்கு கீழ் வாழும், ஏழை எளிய பெண்களின் திருமணம் தங்குதடையின்றி நடைபெற வேண்டும் அவர்களின் பொருளாதாரம் முன்னேற்றம் பெற வேண்டும் என்ற நோக்குடன், ஒவ்வொரு நாளும், சிந்தித்து எண்ணற்ற திட்டத்தை வழங்க உத்தரவிட்டு அதன்படி, எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும், திருமண நிதியுதவித்திட்டம் மற்ற மாநிலங்களே புகழ்ந்திடும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் 5 வகையான திருமண நிதியுதவித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

சமூக நலத்துறையின் மூலம் முவலூர் இராமாமிர்த அம்மையார் நினைவுத்திருமண நிதியுதவித்திட்டம், பழங்குடியினர் பயன்பெறும் வகையில் மூவலூர் இராமாமிர்த அம்மையார் நினைவு சிறப்பு நிதியுதவித்திட்டம், ஏழை விதவைத் தாய்மார்களின் குடும்பம் பயன்பெறும் வகையில் ஈ.வே.ரா மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவித்திட்டம், விதவை பெண்கள் மறுமணம் செய்திடுவதை ஊக்குவிக்கும் வகையில் டாக்டர் தர்மாம்பாள் திருமண நிதியுதவித்திட்டம் மற்றும் மக்களிடையே வகுப்பு வேறுபாடுகளை களையும்பொருட்டு டாக்டர் முத்துலட்சுமிரெட்டி அம்மையார் நினைவு கலப்புத்திருமண நிதியுதவித்திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. 

அதில், மூவலூர் இராமாமிர்த அம்மையார் நினைவுத்திருமண நிதியுதவித்திட்டம் ஏழைக்குடும்பங்களுக்கு மிக உன்னத திட்டமாக திகழ்ந்து  வருகின்றது. இதில், 10ஆம் வகுப்பு வரை படித்த ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ரூ.25,000மும் திருமாங்கல்யத்திற்கு 4 கிராம் தங்கமும், பட்டம் மற்றும் பட்டயம் படித்த பெண்களுக்கு ரூ.50,000மும் திருமாங்கல்யத்திற்கு 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வருவதுடன். தற்பொழுது 8 கிராம் தங்கமும் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், ஒரு ஆரோக்கியமான போட்டி, இருந்திட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எல்லோரும் பட்டப்படிப்பு படித்து முழுமையான பயனைப் பெறவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். 

ஒரு காலத்தில் பெண்கள் எழுதப்படிக்கத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பெற்றோர்கள் இருந்த காலகட்டத்தை மாற்றி ஒவ்வொரு பெண்ணும் ஒரு சாதனையாளராக வேண்டும் என்ற நோக்குடன் மாண்புமிகு அம்மா அவர்கள் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் என்றால் அம்மா எப்பொழுதுமே தனிகவனம் எடுத்துக்கொள்வார்கள். பெண்களின் பணிச் சுமையை குறைக்க விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கியதுடன் அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் தாய்ப்பால் ஊட்டும் அறை, கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு நிதியுதவித்திட்டம், பேறு கால விடுப்பு 6 மாதத்திலிருந்து 9 மாதமாக உயர்த்தி வழங்கியது, தன்னம்பிக்கையுடன் வாழ விலையில்லா ஆடு, கறவை மாடு வழங்கும்திட்டம், பிறந்த குழந்தைகளுக்கான அம்மா பரிசுப்பெட்டகம் என எண்ணற்ற திட்டங்களை வழங்கப்பட்டு வருகிறது. 

அதுமட்டுமின்றி, இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்தாலே போதும், பட்டப்படிப்பு முடியும் வரை கட்டணமின்றி பயின்று வர அனைத்து திட்டங்களும் வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கு உறுதுணையாக இருந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பட்ட மேற்படிப்பு வரை படிக்க வைத்து பொருளாதாரத்தில் நிலைநிறுத்திக் கொள்வதுடன் அரசு வழங்கிடும் திட்டங்களை முழுமையாக பெற்று பயன்பெற்றுக்கொள்ள வேண்டும். இன்று பத்தாம் வகுப்பு படித்த 878 ஏழை பெண்களுக்கு தலா ரூ.25,000 நிதியுதவியுடன் 4 கிராம் தாலிக்கு தங்கம் ரூ.3.11 கோடி மதிப்பீட்டிலும் பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு படித்த ஏழை பெண்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவியுடன் 4 கிராம் தங்கம் ரூ.9.69 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 2481 பயனாளிகளுக்கு ரூ.12.80 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது என தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏ.பி.நாகராஜன், சி.மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டி, ஒ.கே.சின்னராஜ், அம்மன்.கே.அர்சுனன், ஆர்.கனகராஜ், எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு, மாவட்ட வருவாய் அலுவலர் கிருஸ்துராஜ், சமூக நல அலுவலர் .பூங்கோதை மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

Newsletter

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...