பொள்ளாச்சி அருகே குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்து கொலை..!

இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஆனைமலை போலீசார், தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை - சேத்துமடை ரோடு, மாசாணியம்மன் கோயில் மண்டபம் எதிரே உள்ள, தனியார் காம்பவுண்ட் குடியிருப்பில் வசித்து வருபவர் தினேஷ்(27). இவர், ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் வீதியில் தேங்காய், பழம் விற்கும் கடையில் பணியாற்றி வந்தார். இவர் வசிக்கும் காம்பவுண்டில் 15 குடியிருப்புகள் உள்ளன. இதில் ஒரு வீட்டில், இவரது அக்கா பரமேஸ்வரியும் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று அப்பகுதியில் குழாயில் தண்ணீர் பிடிப்பதில், பரமேஸ்வரிக்கு அதே காம்பவுண்டில் வசித்து வரும் அகல்யா என்பவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் அகல்யாவின் அம்மா பானுமதி, பரமேஸ்வரியின் தம்பி தினேஷ்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில், நேற்று அகல்யாவின் கணவர் தமிழ்ச்செல்வன், அவருடைய உறவினர் ராகவேந்திரன் மற்றும் சிலர் தினேஷை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், சம்பவ இடத்திலேயே தினேஷ் உயிரிழந்தார்.

இதுகுறித்து, தகவலறிந்த ஆனைமலை போலீசார் சம்பவம் தொடர்பாக, அகல்யா மற்றும் அவரது தாயார் பானுமதி ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தலைமறைவாக உள்ள தமிழ்ச்செல்வன், ராகவேந்திரன் மற்றும் சிலரை ஆனைமலை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...