கோவை அன்னூர் அருகே சிறுநீர் கழிப்பதற்காக லாரியை நிறுத்திய போது லாரி முன்னோக்கி நகர்ந்து விபத்து - லாரி ஓட்டுநர் உயிரிழப்பு..!

இது குறித்து வழக்குப்பதிவு செய்த கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை அன்னூர் அருகே சிறுநீர் கழிப்பதற்காக லாரியை நிறுத்திய போது, லாரி முன்னோக்கி நகர்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் லாரி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த காடுவெட்டி பாளையம் என்ற இடத்தில் லாரி ஓட்டுநர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த லாரி ஓட்டுநரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் உயிரிழந்தவர் சேலம் மாவட்டம் குகை பகுதியைச் சேர்ந்த ரமேஷ்பாபு என்பதும், அமேசான் நிறுவனத்தின் பொருட்களை ஏற்றிக்கொண்டு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்ததும் தெரியவந்தது. மேலும், நேற்று சேலத்தில் இருந்து கருமத்தம்பட்டி மற்றும் கோவை பகுதிக்கு பொருட்களை டெலிவரி செய்ய லாரியில் ஏற்றி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, சம்பவ இடத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் விசாரணை மேற்கொண்டு அதிகாரியிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட கருமத்தம்பட்டி போலீசார் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது, சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு எதிரே இருந்த பெட்ரோல் பங்கில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, அதில் லாரி ஓட்டுனர் ரமேஷ்பாபு இன்று அதிகாலை இந்த பகுதிக்கு வந்ததும் சிறுநீர் கழிப்பதற்காக லாரியை நிறுத்தி சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும் போது, லாரி முன்னோக்கி நகர்ந்ததால் அதனை தடுக்க முற்பட்டு விபத்தில் சிக்குவது பதிவாகியிருந்தது.

இதனை தொடர்ந்து, கொலை என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் அதனை விபத்து என கண்டறிந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...