சூலூர் அருகே 4 வயது குழந்தை எரித்துக் கொலை, சந்தேக மரணம் குறித்து போலீஸ் விசாரணை

சூலூர் அருகே 4 வயது குழந்தை வீட்டுக்குள் தீ காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீட்டில், சிறுமியின் தந்தையின் நண்பரும் தீ காயங்களுடன் கிடந்து பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: சூலூர் அருகே 4 வயது குழந்தை வீட்டுக்குள் தீ காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீட்டில், சிறுமியின் தந்தையின் நண்பரும் தீ காயங்களுடன் கிடந்து பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (34). இவர் கோவை சூலூர் அடுத்த நடு அரசூர் பகுதியில் மனைவி மற்ற இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். ராஜேஷ் அப்பகுதியில் உள்ள தனியார் வெல்டிங் நிறுவனத்தில் வேலை செய்து வந்த ராஜேஷ், கடந்த 7 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடி வந்தார். குடும்பத்தை காப்பாற்ற, இவரது மனைவி ரம்யா, தனியார் நிறுவனத்தில் தற்காலிக பணிபுரிந்து வருகிறார். 

இந்நிலையில், வியாழக்கிழமை காலை ரம்யா வேலைக்கு சென்று விட்ட நிலையில், குழந்தையுடன் வீட்டில் இருந்த ராஜேஷ் வெளியே சென்று விட்டு வந்து பார்த்த போது கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்த போது அவரது குழந்தை தீ காயங்களுடன் எறிந்த நிலையில் இறந்துள்ளது. 

மேலும், குழந்தையின் அருகிலேயே தனசேகர் கை, கால் மற்றும் மார்பு பகுதிகளில் தீ காயத்துடன் கிடந்துள்ளார். 

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பார்த்த போது குழந்தை ஏற்கனவே இறந்து போன நிலையில் இருந்துள்ளது. அதனையடுத்து, தீயில் காயம்பட்ட தனசேகரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தீடீரென எப்படி வீட்டில் தீ பிடித்தது,? குழந்தை ஏதேனும் விபத்தில் இறந்ததா அல்லது தீ வைத்து எரிக்கபட்டதா என்ற கோணத்திலும், மேலும் தனசேகர் குழந்தைக்கு ஏதேனும் பாலியல் தொந்தரவு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்டாரா? என்கிற கோணத்தில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைக்காக, சூலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட குழந்தையின் தந்தைக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டதால் அவரை சூலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தற்போது போலீசார் இந்த வழக்கை சந்தேக மரணம் என்கிற பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் கூர ஆய்வு அறிக்கை வந்த பிறகே அந்த குழந்தையின் மரணம் குறித்து உண்மை நிலை தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...