உங்கள் வீட்டுப் பிள்ளையாக, தலைவரின் மகனாக, கலைஞரின் பேரனாக கேட்கிறேன் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்- உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதிகளைக் கொடுத்து விட்டுக் காணாமல் போய்விட்டார் என கூறி வருகின்றார். நான் எங்கேயும் காணாமல் போய்விடவில்லை. உங்கள் வீட்டுப் பிள்ளையாக, தலைவரின் மகனாக, கலைஞரின் பேரனாகக் கேட்கிறேன் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்.


கோவை: கோவை தெற்கு தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ராஜவீதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-



திமுக ஆட்சியில் இரண்டாம் தவணை தடுப்பூசி சுமார் 10 கோடி பேருக்குப் போடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே ஒரே ஒரு முதல்வர் மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று கொரோனா நோயாளிகள் நேரடியாகப் பார்த்து ஆய்வு மேற்கொண்டது தமிழகத்தில் மட்டும் தான். நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டும் தான். கொரோனா காலகட்டத்தில் குடும்ப அட்டைகளுக்கு மளிகை தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் நிரந்தரமாகப் படுவார்கள். கோவை அவினாசி மேம்பாட்டுத்திட்டத்தில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது என்று மக்கள் புகார் மனு அளித்துள்ளனர். இந்த கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மழைக்காலத்தில் மேம்பாலம் அருகில் தண்ணீர் தேங்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.



உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவீதம் மகளிர் போட்டியிட்டுள்ளனர். இந்த 50 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தது திமுக தான். தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதிகளைக் கொடுத்து விட்டுக் காணாமல் போய்விட்டார் என கூறி வருகின்றார்.



நான் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறேன் எங்கேயும் காணாமல் போய்விடவில்லை. உங்கள் வீட்டுப் பிள்ளையாக, தலைவரின் மகனாக, கலைஞரின் பேரனாகக் கேட்கிறேன் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா ஆர் கிருஷ்ணன், மருதமலை சேனாதிபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...