கோட்டைமேடு பகுதியில் பிரச்சாரம் செய்வது தொடர்பாக இருபிரிவினரிடையே மோதல்

கோவை கோட்டைமேடு பகுதியில் பிரச்சாரம் செய்வது தொடர்பாக இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் திமுக தொண்டர் காயமடைந்ததை அடுத்து, எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த இருவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், கோட்டைமேடு பகுதியில் பாதுகாப்பிற்காகக் குவிந்துள்ளனர்.


கோவை: கோவை கோட்டைமேடு பகுதியில் பிரச்சாரம் செய்வது தொடர்பாக இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் திமுக தொண்டர் காயமடைந்ததை அடுத்து, எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த இருவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், கோட்டைமேடு பகுதியில் பாதுகாப்பிற்காகக் குவிந்துள்ளனர்.

கோவை மாநகராட்சி தேர்தலில் 82 வது வார்டு, கோட்டைமேடு பகுதியில் திமுக சார்பில் முபஷீரா மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் ரஷீதா பேகம் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்ததைத் தொடர்ந்து முன்னதாக இரு கட்சியினரும் வீதி வீதியாகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இக்பால் திடல் அருகே இருகட்சியினரும் ஒரே நேரத்தில் பிரச்சாரத்திற்கு வந்ததால், யார் விலகிச்செல்வது என வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி, இரு கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தங்களது கொடிகள் கட்டப்பட்டிருந்த குச்சிகள் திமுக கூட்டத்திற்கு வீசி எறிந்தனர்.



இதில், திமுகவை சேர்ந்த அசாருதீன் என்பவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த திமுகவினர், இச்சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, அபுதாகிர், இப்ராஹிம் ஆகிய எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த இருவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், கோட்டைமேடு பகுதியில் பாதுகாப்பிற்காகக் குவிந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...