திருப்பூரில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

131 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுக் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரடியாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ள சூழ்நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளுக்கு 776 வாக்குப்பதிவு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இதில், 131 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுக் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.



பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரடியாகப் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.



இதனை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வினித் நேரில் ஆய்வு செய்தார்.



இதனை மாநகராட்சி ஆணையாளரும் மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடி செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு விளக்கிக் கூறினார். மேலும் வாக்குப் பதிவு மையங்களுக்கு அனுப்ப உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனம் மற்றும் பொருட்களையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...