கிணத்துக்கடவில் ஆர்.எஸ் ரோட்டில் பிரசித்திபெற்ற பிளேக் மாரியம்மன் கோவிலில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கோவை: கிணத்துக்கடவில் ஆர்.எஸ் ரோட்டில் பிரசித்திபெற்ற பிளேக் மாரியம்மன் கோவிலில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி மாரியம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் ஆர்.எஸ் ரோட்டில் பிரசித்திபெற்ற பிளேக் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலின் 111-வது குண்டம் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 17-தேதி கொடியேற்றத்துடன் குண்டம் திருவிழா தொடங்கியது.
இந்தநிலையில், நேற்று காலை குண்டம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு குண்டத்திற்கு பூ வளர்ப்பு நிகழ்ச்சியும், இரவு 7- மணிக்கு மாமாங்கம் ஆற்றிலிருந்து பூவோடு கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் இரவு பிளேக் மாரியம்மன் பூ பல்லக்கில் திருவீதி உலா நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இன்று காலை பிளேக்மாரியம்மன் கோவில் முன்பு அமைக்கப்பட்ட குண்டத்திற்குச் சிறப்புப் பூஜை நடத்தி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி மாரியம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். நாளை காலை மஞ்சள் நீராட்டு விழா நடைப்பெற உள்ளது, இன்று காலை மாரியம்மனுக்குச் சிறப்புப் பூஜைகளுடன் குண்டம் திருவிழா நிறைவடைந்தது.