சசிகலா காலில் விழுந்து ஆட்சி அமைக்கவில்லை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு திமுக ஆட்சி அமைத்துள்ளோம்- உதயநிதி ஸ்டாலின்

சசிகலா காலில் விழுந்து ஆட்சி அமைக்கவில்லை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு திமுக ஆட்சி அமைத்துள்ளோம் என எடப்பாடி பழனிச்சாமி பேச்சுக்குப் பொள்ளாச்சி பிரச்சார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்து வாக்கு சேகரித்தார்.


கோவை: பொள்ளாச்சி நகர மன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ள ராஜேஸ்வரி திடலில் திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.



அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய போது முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தை முடக்கப் போவதாகக் கூறுகிறார்.



எடப்பாடி பழனிசாமி போல பாஜகவிற்கு அடிமையாக இருந்தும், கூவத்தூர் சென்று சசிகலா காலில் விழுந்து முதல்வராக வரவில்லை. நாங்கள் மக்களைச் சந்தித்து மக்களுக்கு வாக்குறுதிகள் கொடுத்து அவர்களின் அன்பைப் பெற்று ஆட்சி அமைத்துள்ளோம்.



எடப்பாடியின் உருட்டல், மிரட்டலுக்கு திமுக அஞ்சாது. ஏராளமான வாக்குறுதிகளை அளித்து விட்டு என்னைக் காணவில்லை என்று எடப்பாடி கூறுகிறார். நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றும் கூட்டத்தில் அவருக்கு நேர் எதிரே அமர்ந்து இருந்தேன்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் நல்லாட்சியைப் பற்றி பாராளுமன்றத்தில் தமிழகத்தைப் பார்த்துத் திருந்துங்கள் என்று ராகுல் காந்தி பேசியுள்ளார். திமுக இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்று தெரிவித்த உதயநிதி மகளிருக்கு அறிவித்த மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.



கோவை மாவட்டம் அதிமுக கோட்டையாக உள்ளதாகக் கூறி வரும் அதிமுகவினருக்கு இந்த தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்தார்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...