பொள்ளாச்சி அருகே மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்..!

ஆழியாறு ஆற்றங்கரையில் இருந்து கோவில் பூசாரிகள் உள்பட பக்தர்கள் பயபக்தியுடன் வந்து 40 அடி நீளமுள்ள தீக்குண்டத்தில் இறங்கினர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் குண்டம் நடைபெறுவது வழக்கம்.

இந்தாண்டுக்கான குண்டம் திருவிழா பிப்ரவரி 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து, நேற்று முன்தினம் மயான பூஜை, நேற்று இரவு சித்திரைத் தேர் திருவீதி உலா நடைபெற்றது.

இந்நிலையில், முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆழியாறு ஆற்றங்கரையில் இருந்து கோவில் பூசாரிகள் உள்பட பக்தர்கள் பயபக்தியுடன் வந்து 40 அடி நீளமுள்ள தீக்குண்டத்தில் இறங்கினர்.



முன்னதாக, கோவில் பூசாரி பூ பந்து தீக்குண்டத்தில் உருட்டிவிட்ட பின்னர் வரிசையாக விரதமிருந்த பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.



இந்த குண்டம் திருவிழாவுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வர கோவை மாவட்ட நிர்வாகம் தடை செய்யப்பட்டிருந்த நிலையில் கோவை, திருப்பூர், மதுரை மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...