வாக்களிப்பது ஜனநாயக கடமை, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம்.
கோவை: உள்ளாட்சித் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், பொள்ளாச்சியில் போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இன்று மாலை தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பொள்ளாச்சியில் காவல்துறை சார்பில் போலீசார், தேர்தல் பாதுகாப்பு ஆயுதப்படை போலீசார் கலந்துகொண்ட அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் துவங்கிய பேரணியை ஏடிஎஸ்பி சுஹாசினி கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோவை சாலை, மத்திய பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
வாக்களிப்பது ஜனநாயக கடமை, தேர்தல் நடைபெறும் நாளில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்குச்சாவடிகளுக்கு சென்று, வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் காவல்துறை பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க தயாராக உள்ளோம். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது காவல்துறை பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் என்பதை வலியுறுத்தி ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் மேற்கொண்டவாறு ஊர்வலமாக சென்றனர். இதில் 250க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.