தி.மு.க., பெண் வேட்பாளர் மீது தேர்தல் அதிகாரியிடம் புகார் கூறியதால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நிரஞ்சனா தேவி மற்றும் அவரது கணவர் நீக்கப்பட்டனர்.
கோவை: கோவை மாநகராட்சியில் போட்டியிடும் தி.மு.க., பெண் வேட்பாளர் மீது தேர்தல் அதிகாரியிடம் புகார் கூறிய, இந்திய கம்யூ.,வை சேர்ந்த இருவர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
கோவை மாநகராட்சி 97வது வார்டில், தி.மு.க., கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சேனாதிபதி மகளான 22 வயது நிவேதா போட்டியிடுகிறார்.
38வது வார்டை சேர்ந்த இவர், வார்டு மாறி போட்டியிடுவதால், கட்சியினருக்குள் இணக்கமான சூழல் இல்லை. இவரை எதிர்த்து, சுயேச்சையாக, கட்சியின் பொறுப்புக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார்.
இதேபோல், கூட்டணி கட்சியான இந்திய கம்யூ.,வை சேர்ந்த நிரஞ்சனா தேவி, சுயேச்சையாக போட்டியிடுகிறார். இவர், மாவட்ட தேர்தல் அலுவலரிடம், தி.மு.க., வேட்பாளருக்கு எதிராக மனு கொடுத்தார்.
அம்மனுவில், 'கோவை மாநகராட்சி, 97வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். இந்த வார்டில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர் நிவேதா, கஸ்தூரி கார்டன் பகுதியில், 591 வீடுகளுக்கு இட்லி குக்கர் வினியோகித்திருக்கிறார்.
மேலும், சுயேச்சை வேட்பாளர்களிடம் பேரம் பேசியிருக்கின்றனர். வேட்பாளர்களை விலை கொடுத்து வாங்குவது குற்ற நடவடிக்கை. இதுவரை, 2 கோடி ரூபாய்க்கும் மேலாக செலவு செய்திருக்கின்றனர்.
வாக்காளர்களுக்கு தலா 1,000 ரூபாய் கொடுத்து ஓட்டுகளை வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நிவேதாவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், அவர் மீது குற்ற நடவடிக்கை பதிய வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நிரஞ்சனா தேவி மற்றும் அவரது கணவர் விஜயகுமார் ஆகியோர் இந்திய கம்யூனிஸ்ட் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கப்பட்டிருக்கின்றனர்.