கோவையில் திமுகவிற்கு ஆதரவாக அயல் நாட்டு நபர் வாக்கு சேகரிப்பு..!! முதல்வரின் பெண்களுக்கு பேருந்தில் டிக்கெட் இல்லை என்ற திட்டத்தால் ஈர்க்கப்பட்டு பிரச்சாரம்..!

பெண்களுக்கான திட்டங்கள் தந்த முதல்வருக்கு வாக்களிக்க வேண்டும் என்று ருமேனியன் ஸ்டீஃபன் அனல் பறக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.


கோவை: முதலமைச்சரின் பெண்களுக்கு பேருந்தில் டிக்கெட் இல்லை என்ற திட்டத்தால் ஈர்க்கப்பட்டு கோவையில் திமுகவிற்கு ஆதரவாக அயல் நாட்டு நபர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

கோவையில் நாளை மறுநாள் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்றுடன் பிரச்சாரம் நிறைவடைவதால், பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் அனல் பறக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்த நிலையில், திமுகவை ஆதரித்து அயல் நாட்டு நபர் ஒருவர் சிங்காநல்லூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தொழில்முறை பயணமாக, ருமேனியா நாட்டில் இருந்து கோவைக்கு வந்துள்ளார் ஸ்டீஃபன்.

வழக்கமாக வெளிநாடுகளுக்கு பயணிக்கும் போது, அங்குள்ள மக்களை புரிந்து கொள்ள அரசு பேருந்திலும், ஆட்டோவிலும் பயணிப்பதாக தெரிவித்த ஸ்டீஃபன், இங்குள்ள அரசு பேருந்தில் பயணித்த போது, பேருந்தில் பயணித்த பெண்கள் யாரும் டிக்கெட் எடுக்காதது குறித்து விசாரித்துள்ளார்.

பின்னர், இது குறித்து அவரது ஓட்டல் அறைக்கு வந்த பின், தன் நண்பரான கோகுலை அழைத்து அவர் பேருந்து அனுபவம் குறித்து பேசியுள்ளார். அப்போது, இது குறித்து விளக்கிய அவரது நண்பர் கோகுல், தமிழ்நாடு அரசாங்கத்தின் பெண்களுக்காக திட்டம் குறித்து விளக்கியுள்ளார்.

அதனை தொடர்ந்து, முதல்வருக்கு நன்றி தெரிவித்த, ஸ்டீஃபன் நடைபெறுகின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபடவும் வாக்காளர்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் அவரின் நண்பரிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மருத்துவர் கோகுல் உதவியுடன் அவரின் கட்சி நண்பர்கள் திமுகவின் தொண்டர்களுடன் ஸ்டீஃபன் திமுக கொடியுடன் புல்லட்டிலும், பேருந்திலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.



பெண்களுக்கான திட்டங்கள் தந்த முதல்வருக்கு வாக்களிக்க வேண்டும் என்று ருமேனியன் ஸ்டீஃபன் அனல் பறக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

வளர்ந்த நாடுகளிலும், அதன் வசிக்கின்ற நாட்டிலும் கட்டணமின்றி பெண்கள் பயணிப்பதில்லை என தெரிவித்த ஸ்டீஃபன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தினை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

திமுக கொடியுடனும், பதாகையுடனும் பேருந்திலும், பேருந்து நிலையங்களிலும் பிரச்சாரத்திலே ஈடுபட்டிருக்கின்றார். தனது நாடு ருமேனியாவிலே தேர்தல் நடந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாத ஸ்டீஃபன் கோவையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...