கோவை நகர்புற உள்ளாட்சி தேர்தல்: இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு; தேர்தல் விதிகளை கடைபிடிக்க அதிகாரிகள் உத்தரவு..!

காலை முதலே வேட்பாளர்கள் வீதி வீதியாக, மேள தாளத்துடன் சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.


கோவை: கோவை நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில், தேர்தல் விதிகளை கடைபிடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் 100 மாநகராட்சி, 7 நகராட்சிகள் 33 பேரூராட்சிகளுக்கு வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான, வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 28 முதல் கடந்த 4ம் தேதி வரை நடைபெற்றது. பின்னர், 5ம் தேதி மனுத்தாக்கல் பரிசீலிக்கப்பட்டன.

இதனிடையே, பேரூராட்சிகளில் 9 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இறுதியாக, கோவை மாவட்டத்தில் 802 பதவிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறவுள்ளது.

கோவை மாநகராட்சியில் நூறு வார்டுகளில் 778 வேட்பாளர்கள், மாநகராட்சியில் 861 பேர், பேரூராட்சிகளில் 1727 என மொத்தம் 3,366 பேர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகின்றனர். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகளின்படி இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவுக்கு வரவுள்ளது. எனவே, 6 மணிக்கு மேல், எந்த கட்சியினரும் நேரடி மற்றும் மறைமுக பிரச்சாரம் செய்யக்கூடாது.

அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக் கூட்டங்கள் மற்றும் ஏனைய பிரச்சாரங்கள் அனைத்தையும் ஓட்டுப்பதிவு முடியும் நேரத்தில் இருந்து 48 மணி நேரத்திற்கு முன்பாக கண்டிப்பாக நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரச்சாரம் முடிய இன்று ஒரு நாள் மட்டுமே உள்ளதால், காலை முதலே வேட்பாளர்கள் வீதி வீதியாக, மேள தாளத்துடன் சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...