மாசாணியம்மன் கோவிலில் நாளை குண்டம் திருவிழா

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நாளை நடக்க இருக்கும் குண்டம் திருவிழாக்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.


கோவை: பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நாளை நடக்க இருக்கும் குண்டம் திருவிழாக்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் இக்கோவிலுக்குத் தினந்தோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த கோவிலில் குண்டம் திருவிழா கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது நாளை காலை 9.30 மணிக்குக் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.



இதற்காகக் குண்டம் வளாகத்தைச் சுத்தம் செய்யும் பணியில் தீவிரமாகக் கோவில் நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றது. ஆண்கள் பெண்கள் தனித்தனியாக நின்று குண்டம் திருவிழாவைக் காணத் தடுப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

மேலும், பக்தர்கள் குண்டம் இறங்குவதை வளாகத்திற்கு வெளியில் நின்று நிகழ்ச்சிகளை ட்ரோன் கேமரா பயன்படுத்தி நேரலை காட்சிகளை 2 எல்இடி திரைகளில் மூலமாக ஒளிபரப்ப முடிவு செய்துள்ளனர்.

கோயிலைச் சுற்றி பல்வேறு இடங்களில் கூடுதல் மின் விளக்கு அமைக்கப்பட்டுக் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் குண்டம் இறங்கும் இடத்தில் ஆம்புலன்ஸ் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் குழுக்கள் நியமிக்கப்பட்டு அவர்களும் தயார் நிலையில் உள்ளனர். மேலும் குண்டம் திருவிழாவைக் காண வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காகக் கூடுதலாக வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

போலீசார் ஆயுதப்படை மற்றும் ஊர்க்காவல் படையினர் என 350 க்கும் மேல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இந்த ஆண்டு திருவிழாவுக்கு வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...