கூடலூர் அருகே குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்த மாற்றுத்திறனாளிக்கு 38 ஆண்டு சிறை தண்டனை

நான்கரை வயது பெண் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்த 55 வயது மாற்றுத்திறனாளிக்கு 4 பிரிவுகளின் கீழ் 38 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி நீதிபதி சஞ்சய் பாபா தீர்ப்பு வழங்கியுள்ளார்.



நீலகிரி: நான்கரை வயது பெண் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்த 55 வயது மாற்றுத் திறனாளிக்கு 4 பிரிவுகளின் கீழ் 38 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி நீதிபதி சஞ்சய் பாபா தீர்ப்பு வழங்கியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதியில் அப்பாஸ் என்ற நபர் கடந்த 2019 ஆம் ஆண்டு அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த நான்கரை வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் அப்பாஸை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கானது நீலகிரி மாவட்டம் உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு உதகை மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரணை செய்த மாவட்ட தலைமை நீதிபதி சஞ்சய் பாபா குற்றவாளிக்கு நான்கு பிரிவுகளின் கீழ் 38 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியும், 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.

இதையடுத்து குற்றவாளியைக் கோவை மத்திய சிறைச்சாலைக்குக் கொண்டு சென்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...