திமுக தோல்வி பயத்தில் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா- முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

திமுக தோல்வி பயத்தில் காவல்துறையினர் துணையோடு வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா பரிசுப் பொருட்களை வழங்கி ஜனநாயக படுகொலையில் ஈடுபட்டு வருகிறார்கள் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.


கோவை: திமுக தோல்வி பயத்தில் காவல்துறையினர் துணையோடு வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா பரிசுப் பொருட்களை வழங்கி ஜனநாயக படுகொலையில் ஈடுபட்டு வருகிறார்கள் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.



பொள்ளாச்சி நகராட்சி 36 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து திருவள்ளூர் தேர்தலில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது,



கடந்த 9 மாத கால திமுக ஆட்சியில் தமிழக மக்களுக்கு எந்த நலத் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. தமிழக மக்கள் முதல்வர் மீது கடும் அதிர்ப்தியில் உள்ளார்கள் அதை மூடி மறைக்கவே என் மீது பொய் வழக்குப் போட்டு 110 கோடி முடக்கப்பட்டுள்ளது என்று தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். வருமான வரித்துறை சோதனையின்போது என் வீட்டிலிருந்தும், உறவினர்களிடமும் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

தற்போது, ஒரு லோடு மணல் எடுப்பதற்கு 2,000 ரூபாய் லஞ்சம் பெறப்படுகிறது யாரும் வீடு கட்ட முடியவில்லை. இப்படிப்பட்ட சூழலில் திமுகவைப் புறக்கணிக்க மக்கள் தயாராக இருப்பதால் ஏதாவது ஒருவகையில், தில்லுமுல்லு செய்து அதிமுகவினர் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்கின்றார்கள்.

கோவை மாவட்ட மக்கள் அமைதியானவர்கள் திமுகவினர் வெளியூர்களிலிருந்து ரவுடிகளை வரவழைத்து கலவரத்தை ஏற்படுத்தி அதிமுகவினரைத் தாக்குவதோடு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர்.

காவல்துறையினர் துணையோடு அணைத்து இடங்களிலும் பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி ஜனநாயகப் படுகொலையைச் செய்து வருகின்றார்கள்.

இதை, திமுகவினர் நிறுத்தாவிட்டால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் ஒப்புதல் பெற்று போராட்டத்தில் நடத்துவதாகத் தெரிவித்த எஸ் பி வேலுமணி கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அதிமுக வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...