கோவை புலியகுளம் பகுதியில் வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் கொடுத்து வருவதாக பாஜகவினர் புகார்; போலீசார் விசாரணை

புலியகுளம் வார்டு 64 பகுதியில், பணம்.பட்டுவாடா செய்து வருவதாக, அதே வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கோமதி ராஜன் உள்ளிட்ட பாஜகவினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.


கோவை: கோவை மாநகராட்சி 64 வது வார்டுக்கு உட்பட்ட புலியகுளம் மருதாசல வீதியில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாக, பாஜகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.



புலியகுளம் வார்டு 64 பகுதியில், திமுகவினர் பணம்.பட்டுவாடா செய்து வருகின்றனர் என்ற தகவலின் பேரில், அதே வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கோமதி ராஜன் மற்றும் அவரது கணவர் ஏ.டி.ராஜன் உள்ளிட்ட பாஜகவினர் அங்கு சென்ற போது, திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கொண்டிருந்தனர், என்று குற்றம் சாட்டினர்.

இதனையடுத்து, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்தனர். அப்போது, பணம் பட்டுவாடா செய்து வந்த நபர்கள், பணத்தை அருகில் இருந்த சிறிய சந்துக்குள் வீசியதாக கூறப்படுகிறது.



இதனையடுத்து, காவல்துறையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து பணம் வைத்திருந்த இருவரையும் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தால், வார்டு 64 யில் திமுக மற்றும் பாஜகவினர் மத்தியில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...