கோவை, கூடலூர் நகராட்சி திமுக நிர்வாகியின் வாகனத்திலிருந்து 210 ஜோடி வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்

கோவை, கூடலூர் நகராட்சியின் 6 வது வார்டு, திமுக நிர்வாகியின் வாகனத்திலிருந்து ரூ.2.10 லட்சம் மதிப்புள்ள 210 ஜோடி வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை, கூடலூர் நகராட்சியின் 6 வது வார்டு, திமுக நிர்வாகியின் வாகனத்திலிருந்து 210 ஜோடி வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



தமிழகத்தில் வரும் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவு பெறுவதையொட்டி வேட்பாளர்களின் இறுதி கட்ட பிரச்சாரம் அனல் பறக்கத் துவங்கியுள்ளது.

இந்த நிலையில் 27 வார்டுகளை கொண்ட புதிதாகத் தரம் உயர்த்தப்பட்ட கூடலூர் நகராட்சியிலும் தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்த நிலையில், இந்த நகராட்சியில் உள்ள 6 வது வார்டில் திமுக தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் கூடலூர் பேரூராட்சியின் தலைவருமான அறிவரசு போட்டியிடுவதால் ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இதனால், அதிமுக - திமுக இடையே இவ்வார்டில் கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில், 6 ஆம் வார்டில் சுயேட்சையாகப் போட்டியிடும் விக்னேஸ் என்பவர் தேர்தல் பறக்கும் படையினருக்கு திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசு பொருட்களை வழங்குவதாக புகார் அளித்துள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கலால் துறை தாசில்தார் ஜெயசித்ரா தலைமையிலான பறக்கும் படையினர் விக்னேஸ் புகாரளித்த பகுதிக்குச் சென்றனர்.



அப்போது, அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திமுக பிரமுகர் கோபால் என்பவருக்குச் சொந்தமான டூவீலரில் இருந்து ரூ.2.10 லட்சம் மதிப்புள்ள 210 ஜோடி வெள்ளிக் கொலுசுகளைப் பறிமுதல் செய்து நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரான விஜயாவிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...