கோவை மாநகராட்சி பகுதிகளில் 19 நாட்களில் ரூ.43.15 லட்சம் பறக்கும் படையினரால் பறிமுதல்

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 19 நாட்களில் இதுவரை ரூ.43.15 லட்சம் பணம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.7.44 லட்சம் மதிப்புள்ள 3,771 பட்டுப் புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 19 நாட்களில் இதுவரை ரூ.43.15 லட்சம் பணம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.7.44 லட்சம் மதிப்புள்ள 3771 பட்டுப் புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சி பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைக்காக மாநகராட்சி 5 மண்டலங்களில் ஒரு மண்டலத்துக்கு ஒரு ‘ஷிப்ட்'க்கு ஒரு பறக்கும் படை வீதம், 3 ஷிப்ட்களுக்கு தலா 3 பறக்கும் படைகள் வீதம் 15 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பறக்கும் படை அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி முதல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தவிர, அனைத்து மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மாநகராட்சி 100 வார்டுகளில் 15 லட்சத்து 61,819 வாக்காளர்கள் உள்ளனர். 1290 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் 169 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்நிலையில் பறக்கு படையினரால் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.43.15 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஜனவரி 28ம் தேதி முதல் பிப்ரவரி 15 ம் தேதி வரை 19 நாட்களில் இதுவரை ரூ.43.15 லட்சம் பணம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.7.44 லட்சம் மதிப்புள்ள 3771 பட்டுப் புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன,’’ என்றார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...