நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு கோவையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கோவை கோட்டத்திலிருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்குக் கூடுதல் பேருந்துகளை இயக்கவுள்ளதாகக் கோவை அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.


கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கோவை கோட்டத்திலிருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்குக் கூடுதல் பேருந்துகளை இயக்கவுள்ளதாகக் கோவை அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது. கோவை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. கோவை மாவட்டத்தில் வசிப்போரின் குடும்ப உறுப்பினர்கள் பலர் பணி நிமித்தம் காரணமாகத் திருப்பூர், ஈரோடு, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தங்கிப் பணி புரிந்து வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை எதிர்நோக்கித் தேர்தல் பிரிவு அதிகாரிகள் பணி புரிந்து வருகின்றனர்.

இதனை அடுத்து கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வெளி மாவட்டங்களில் தங்கி பணி புரிபவர்கள் தேர்தல் நாளான்று வாக்களிக்க ஏதுவாக வரும் 18, 19 மற்றும் 20ம் தேதிகளில் கோவை கோட்டத்திலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து கோவை அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவையிலிருந்து திருப்பூர், கரூர், ஈரோடு, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தற்போது இயக்கும் பேருந்துகளுடன் கூடுதலாக மாவட்டம் வாரியாக 50 பேருந்துகள் முதல் கட்டமாக இயக்க திட்டமிட்டுள்ளோம். பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்,’’ என்றார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...