ஓட்டுக்கு பணம், பொருட்கள் கொடுத்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தர்ணா..!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.



கோவை: ஓட்டுக்கு பணம், பொருட்கள் கொடுத்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகே தர்ணாவில் ஈடுபட்ட ஈஸ்வரன் கைது செய்யப்பட்டார்.

நகர் புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் பல்வேரு இடங்களில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகள் வாக்காளர்களுக்கு குக்கர், ஹாட்பாக்ஸ் போன்ற பொருட்களை பரிசுபொருட்களாக வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது.

இதனிடையே, கோவை மாநகராட்சி நகர்புற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை வழங்கி வரும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தை சேர்ந்த ஈஸ்வரன் உள்ளிட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது, ஓட்டுக்கு பணம் நாட்டுக்கு அழிவு என்ற வாசகம் உள்ள பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர் சமரசம் பேசி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க முயற்சி செய்தனர்.

இருப்பினும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மறுமலர்ச்சி மக்கள் இயக்க நிறுவனர் ஈஸ்வரன் உள்பட 7 பேரை காவல்துறை வாகனத்தில் கைது செய்தனர்.



அப்போது, வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விடுத்து, அதனை தடுக்க வேண்டும் என போராடியவர்கள் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறையினரின் அடக்குமுறையை கண்டித்து கோசங்கள் எழுப்பினர்.



இதையடுத்து, தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூங்கி சென்று கைது செய்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...