கோவை மாவட்டத்தில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு நர்சரி பிரைமரி பள்ளிகள் மீண்டும் திறப்பு..!

இரண்டு வருடங்களுக்குப் பிறகு பள்ளிகள் தொடங்கப்பட்டதால் ஒரு சில குழந்தைகள் அழுதபடி இருந்தனர்.



கோவை: கோவை மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நர்சரி பிரைமரி பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை கடந்த ஆண்டு கடுமையாகத் தாக்கியது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.

இதையடுத்து, கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதே போல், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

இதற்கிடையே, கொரோனா மூன்றாவது அலை தாக்கம் குறைந்ததற்கு பிறகு, கடந்த 1ம் தேதி முதல், 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.



இந்நிலையில், இன்று நர்சரி பிரைமரி பள்ளிகள் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டன. இதனையடுத்து, குழந்தைகளை வாசலிலேயே உற்சாகத்தோடு வரவேற்ற ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் அழைத்துச்சென்றனர்.



இரண்டு வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் தொடங்கப்பட்டதால் ஒரு சில குழந்தைகள் அழுதபடி இருந்தனர்.



அப்போது, குழந்தைகளை ஆடிப்பாடி உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...