கோவையில் உள்ள கரூர் மாவட்ட திமுக நிர்வாகிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - வானதி சீனிவாசன் வலியுறுத்தல்..!

தேர்தல் ஆணையம் உடனடியாக கோவையில் உள்ள கரூர் மாவட்ட திமுக நிர்வாகிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.



கோவை: கோவை தேர்தல் ஆணையம் உடனடியாக கோவையில் உள்ள கரூர் மாவட்ட திமுக நிர்வாகிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், கோவையில் பல்வேறு இடங்களில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாகவும், இதனை கேட்டால் பாஜகவினரை மிரட்டுவதாகவும் தெரிவித்த அவர், இது குறித்து புகார் அளித்தால் நடவடிக்கைகள் எடுப்பதில்லை எனவும், இதனால் சில இடங்களில் கைகலப்பு ஏற்படும் சூழல் நிலவுவதாக தெரிவித்தார்.

எனவே, தேர்தல் ஆணையம் உடனடியாக கோவை மாவட்டத்தில் உள்ள கரூர்காரர்களை (திமுக) அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினார். கடந்த முறை ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத திமுக இம்முறை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விதிகளை மீறி செயல்படுவதாக தெரிவித்தார்.



அதேபோல, சிறுவாணி அணைமுழு கொள்ளளவை எட்டுவதற்கு தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மக்களின் தேவைகளின் மீது கவனம் செலுத்தாமல் கடைசி நேரத்தில் அதிகார பலத்தால் வாக்காளர்களை மிரட்டி வெற்றி பெற முடியும் என திமுகவினர் எண்ணுவதாக தெரிவித்தார். மேலும், கோவையில் உள்ள விலங்கியல் பூங்கா முழுமையாக செயல்படவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

மேலும், நாளை முழுவதும் பாஜக மாநில தலைவர் கோவையில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...