கோவை மாநகராட்சி 52வது வார்டில் ஆடல் பாடலுடன் திமுக வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் வாக்கு சேகரிப்பு..!

மக்களின் கோரிக்கைகள் நிறைவேற தன்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.


கோவை: கோவை மாநகராட்சி 52வது வார்டில் ஆடல் பாடலுடன் சென்று திமுக வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் வாக்குகள் சேகரித்தார்.

கோவை மாநகராட்சி 52வது வார்டில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் இலக்குமி இளஞ்செவ்வி கார்த்திக் போட்டியிடுகிறார். அவர் வார்டு முழுவதும் வீடு வீடாகச் சென்று திமுக அரசின் சாதனைகளை விளக்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகிறார்.

இந்நிலையில், வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் இன்று ஹட்கோ காலனி பகுதிகள் ஸ்டாலின்தான் வராரு விடியல் தர போராரு என்ற பாடலுக்கு ஆடல் பாடலுடன் சென்று வீதி வீதியாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார் அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



அப்போது, வேட்பாளர் இலக்குமி இளன்செல்வி கார்த்திக் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது;

நான் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள். இந்த பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக மக்கள் நடந்து செல்ல முடியாதபடி உள்ளது எனவும் அதனை சரி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

நான் வெற்றி பெற்றதும் சாலைகள் அனைத்தையும் சரி செய்து தருவேன். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தான் இந்த பகுதியில் கொசு மருந்து அடிக்கப்பட்டு, கொசுக்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் சாக்கடை வசதி செய்து கொடுக்க வேண்டும், மழைநீர் வடிகால் அமைத்துத் தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.



எனவே, மக்களின் கோரிக்கைகள் நிறைவேற 52வது வார்டில் போட்டியிடும் எனக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்யுங்கள். உங்களது கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவேன் என தெரிவித்தார். அவருடன் பகுதி பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம், சின்னமணி, விஸ்வநாதன், செல்வராஜ், அப்பாசாமி, அர்ஜுனன், மகளிரணி பரிமளம், அமராவதி, அசோகன் உள்பட திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...