கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கப்பட்டதைக் கண்டித்து கோவைக்கு வந்த மத்திய அமைச்சருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற த.பெ.தி.க-வினர் கைது

மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கப்பட்டதைக் கண்டித்து, கோவைக்கு வருகை தந்த மத்திய பெட்ரோலிய துறை அமைச்சருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கப்பட்டதற்கு, பல்வேறு அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கப்பட்டதைக் கண்டித்து, கோவைக்கு வருகை தந்த மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்திருந்தது. 

அதன்படி இன்று காலை கோவை விமான நிலைய நுழைவு வாயிலுக்கு முன்பாக கருப்பு கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட அவ்வமைப்பினர், மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். 

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கட்டாய விடுப்பிற்கு பதிலாக விருப்ப விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்து இருப்பது தமிழர்களுக்கு எதிரான செயல் என குற்றம்சாட்டிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், இந்த அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தினர். 

இதையடுத்து மத்திய அமைச்சருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 16 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...