நீண்ட இடைவெளிக்கு பின்னர், நாளை முதல் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறப்பு

நாளை 16 ஆம் தேதி முதல் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., போன்ற நர்சரி வகுப்புகளுக்கான பள்ளிகளையும், பிளே ஸ்கூல் எனப்படும் மழலையர் பள்ளிகளையும் திறந்து, நேரடி வகுப்பு நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.


கோவை: நீண்ட இடைவெளிக்கு பிறகு, நாளை முதல் எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகள் துவங்க உள்ளன.

தமிழகத்தில், கொரோனா பரவல் தடுப்புக்கான ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இதன்படி, இம்மாதம் 1ம் தேதி முதல், பள்ளி, கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., போன்ற நர்சரி வகுப்புகளுக்கான பள்ளிகளையும், பிளே ஸ்கூல் எனப்படும் மழலையர் பள்ளிகளையும் திறந்து, நேரடி வகுப்பு நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

இதன்படி, நாளை முதல் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த பள்ளிகளில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் படிப்பதால், கொரோனா தொற்று மற்றும் காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படாத வகையில் சிறப்புக் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளில், குழந்தைகள் சமூக இடைவெளியை பின்பற்றி அமர வைக்கப்பட்டு, அவர்களுக்கு உற்சாகமூட்டும் பாடங்களை நடத்த, தொடக்க கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

அரசு பள்ளிகள் சிலவற்றிலும், அவற்றின் அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களிலும், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் உள்ளன. அவற்றில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கும் பகுதிகளில், பள்ளிகள் ஓட்டு சாவடிகளாக பயன்படுத்தப்பட உள்ளதால், ஓட்டுப்பதிவு முடிந்து, 21 -ம் தேதி முதல் வகுப்புகளை துவங்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...