இணைய வழி மூலமாக வருமான வரி செலுத்துவது எப்படி? கோவையில் தமிழக தலைமை ஆணையர் கீதா ரவிச்சந்திரன் தலைமையில் நிகழ்ச்சி ஏற்பாடு

கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள வருமானவரி மாவட்ட அலுவலகத்தில் வைத்து அவுட்ரீச் எனும் இணைய வழி மூலமாக எளிமையான முறையில் வருமான வரி செலுத்துவது குறித்தான ஆலோசனை நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள வருமானவரி மாவட்ட அலுவலகத்தில் வைத்து அவுட்ரீச் எனும் இணைய வழி மூலமாக எளிமையான முறையில் வருமான வரி செலுத்துவது குறித்தான ஆலோசனை நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில், சென்னை பாண்டிச்சேரி தலைமை ஆணையர் கீதா ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். சென்னை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் கோவை ஆணையர் பூபால் ரெட்டி ஆகியோர், நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினர்.



இந்த நிகழ்ச்சியில், கொங்கு பகுதியை சேர்ந்த தொழில் அதிபர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு இணைய வழி மூலமாக எளிமையான முறையில், எப்படி வருமான வரி செலுத்துவது மற்றும் அது குறித்தான சந்தேகங்கள், எப்படி தங்களுடைய வரவு செலவு கணக்குகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வது என்பதற்கான எ.ஐ.ஸ். என்ற இணைய வழி மூலமாக விளக்கமளிக்கப்பட்டது.

அங்கு மேடையில் பொருத்தப்பட்டிருந்த திரையில், எப்படி இணைய வழி மூலமாக வருமான வரி செலுத்துவது, உதவி பெற தொடர்பு கொண்டு விளக்கம் பெறுவது எப்படி,என்று செயல்முறை விளக்கம் காட்டப்பட்டது.

கோயம்புத்தூர் நகை தயாரிப்பாளர் சங்கம், கோயம்புத்தூர் நகை விற்பனையாளர் சங்கம், கொடிசியா, சேலம் கிரானைட் மார்பிள் டைல்ஸ் சங்கம், வெஜிடேபிள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம், ஈரோடு டெர்மெரிக் மேர்சன்ட்ஸ் சங்கம் உட்பட பல்வேறு தொழில் அதிபர்கள் மற்றும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...