கோவை திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது உக்கடம் ஜி.எம்.நகர் பகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட சுமையாக்கு ஆதரவு கோரி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கோவை திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது உக்கடம் ஜி.எம்.நகர் பகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட சுமையாக்கு ஆதரவு கோரி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய கரு.பழனியப்பன்:-
நான் ஏன் சுமையா கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறேன் என்றால், இதே போல் ஹிஜாப் அணிந்து கொண்டு சுமையா கோவை மாநகராட்சியில் போய் அமர வேண்டும் அப்போது தான் கோவை எப்படி உள்ளது என அவர்களுக்கு தெரியும், கல்லூரிக்கு படிக்கச்சென்ற பெண்ணிடம் காவி துண்டை போட்டுக்கொண்டு கர்நாடகாவில் விரட்டினார்கள்.
தமிழகம் பெண் குழந்தை படிப்ப போகிறதா என்பதை மட்டுமே பார்க்கும். இதை தான் தொடர்ச்சியாக பெரியார் துவங்கி, அண்ணா, கலைஞர், ஸ்டாலின் வரை திராவிடர் கழகம், திராவிடர் சிந்தாதம் பின்பற்றுகிறது. பெண்கள் படிக்க வேண்டும் என தொடர்ச்சியாக, காலம் காலமாக வலியுறுத்தி வரும் இயக்கம் தான் திராவிட இயக்கம்.
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவியை காவிகும்பல் மிரட்டிய போது தனியொரு பெண்ணாக போராடி மாணவி கல்லூரிக்குள் சென்றது. காவி கும்பல் கல்லூரிக்கு வெளியே நின்றார்கள். அந்த மாணவி கல்வி கற்று வெளியே வரும். ஆனால் வெளியே நின்றவர்களின் நிலை என்ன என அனைவருக்கும் தெரியும்.
தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கும், இந்துக்களுக்கு எந்த வேறுபாடுகளும் இல்லை. கர்நாடகாவில் இந்த பிரச்சனை வந்த போது தமிழகத்திலிருந்து தான் அதிக கண்டன குறல் கிளம்பியது. கர்நாடகாகாரர்களே ஆச்சரிமாக பார்த்தார்கள், ஆனால் அவர்களுக்கு தெரியாது, காஷ்மீரில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றாலும் தமிழகம் அதே போல குறல் கொடுக்கும் என. முதல் முதலாக நமது மொழியை உயர்த்தி பிடித்த போது இந்தி திணிப்பிற்கு எதிராக குறல் கொடுத்த போது அனைத்து மாநிலங்களும் அமைதியாக இருந்தது.
அப்போது, தமிழகம் அனைவருக்கும் முன்னோடியாக இருந்தது. 50 ஆண்டுகளுக்கு பின் இப்போது கர்நாடகா சொல்ல துவங்கி உள்ளனர். கன்னடம் படிக்க வேண்டியது அவசியம், படிக்காமல் விட்டுவிட்டோம், தமிழகத்தை போல எங்களை வழிநடத்த ஆள் இல்லையே என்று கூறும் நிலையில் வந்து நிற்கிறது.
ஸ்டாலினை முன்னிறுத்தி மேற்குவங்க முதல்வர் மம்தா கூறுகிறார் நாம் இணைந்து மதவாத அமைப்புகளை விரட்டியடிப்போம் என்று, தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்தியாவிற்கு வழிகாட்டுகிறார் என ஆங்கில நாளிதழில் கட்டுரை வருகிறது. காரணம் தமிழகத்தில் எந்த மதத்துவேசம், வேறுபாடுகள் இல்லாமல், ஜாதி வேறு பாடு இல்லாமல் அவரவர் அடையாளங்களை வைத்துகொள்ளுங்கள் அதில் எந்த சிக்கலும் இல்லை என்று மேலும் ‘’பாயை கூட பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் நமக்கு யார் பிரியாணி கொடுப்பார்கள், அவர்களை போல் யாரும் பிரியாணியைச் செய்ய முடியாது.
அதே போல் பாய்கள் நம்மளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் அப்போது தான் விநாயகயர் சதுர்த்திக்கு அவர்களுக்கு கொழுகட்டைகள் கிடைக்கும் நம்மை போலக் கொழுக்கட்டையை அவர்கள் செய்ய முடியாது’’. அவரவர் அடையாளங்களுடம் வாழ வேண்டும் குறிப்பாகக் கோவையில் அவ்வாறு வாழ்கிறார்கள் என்பதை தமிழகத்திற்கு சொல்ல வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது.
அதே போல் சுமையா போல அனைத்து பெண்களும் பொது வேலைகளுக்கு வரவேண்டும், வீட்டிற்குள் உள்ள பெண்கள் வெளியே வர வேண்டும் அதற்கு கோவை மாநகராட்சியில் திமுக கூட்டணி வெற்றிபெற வேண்டும். கோவையில் தேர்தல் தோல்வி பயத்தில் அதிமுகவினர் திமுக நிர்வாகிகள் வீடு, கார் கண்ணாடியை உடைத்துள்ளனர். அப்போது எதிர்வினையாற்றாமல் திமுகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகி விட்டது என சிலர் நம்பலாம், ஆனால் நம்பாதீர்கள் அது தேர்தலுக்காக நாடகம் ஆடுகிறார்கள். காலாகாலத்திற்கு இவர்கள் அவர்களின் அடிமை தான், அவர்கள் சொல்கேட்டு தான் இவர்கள் நடப்பார்கள், இவர்களுக்கு சிறுபான்மை நலன், மக்கள் இணக்கமாக வாழ வேண்டும் என எதைப்பற்றியும் அக்கறை இல்லை என தெரிவித்தார்.