எந்த கட்சியினர் பணம் கொடுத்தாலும் வாங்கி கொண்டு பாஜகவிற்கு ஓட்டுப் போடுங்கள்: கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் பிரச்சாரம்

எந்தக் கட்சி ஓட்டுக்குப் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு பாஜகவினருக்கு வாக்களிக்க வேண்டும் என கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.


கோவை: எந்தக் கட்சி ஓட்டுக்குப் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு பாஜகவினருக்கு வாக்களிக்க வேண்டும் என கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கருமத்தம்பட்டி நகராட்சியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கொங்கு தமிழில் பேசி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், நகராட்சியில் வார்டு உறுப்பினர்களுக்குக் கிடைக்கும் நிதியை முறையாகச் செயல்படுத்த பாஜகவினரைத் தேர்வு செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசு வழங்கும் பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டம், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட திட்டங்கள் எளிதாகக் கிடைக்க பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.

திமுக அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் ஓட்டுக்கு ஹாட் பாக்ஸ் வழங்கி வருவதாகவும், அதனைப் பெறப் பெண்கள் போட்டிப் போட்டுக் கொள்வதாகவும் விமர்சித்தார். எந்தக் கட்சி ஓட்டுக்குப் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு பாஜகவினருக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கூறினார்.

தற்போது வாக்காளர்களுக்கு திமுக மற்றும் அதிமுகவினர் வழங்கும் 300 ரூபாய் பரிசுப் பொருளைப் பெறுவதற்குப் பெண்கள் 4 நாட்கள் வரை வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே காத்திருப்பதாக நகைச்சுவையாகக் கூறிய அவர், இதனால் நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் வீதம் 4 நாட்களுக்கு 2,000 ரூபாய் வரை பெண்கள் வருவாயை இழப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...