நீட் தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறுவது குறித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பொய் சொல்லி வருவதாகவும், நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள ஆவணங்களைப் படித்துப் பார்த்துவிட்டு அவர் பேச வேண்டும் எனவும் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
கோவை: நீட் தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறுவது குறித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பொய் சொல்லி வருவதாகவும், நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள ஆவணங்களைப் படித்துப் பார்த்துவிட்டு அவர் பேச வேண்டும் எனவும் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் காந்திபுரம், வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளைச் சந்தித்து, அக்கட்சியின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ ஆலோசனைகள் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி 80 சதவீத இடங்களில் வெற்றி பெறும் எனவும், மதிமுக போட்டியிடும் இடங்களில் வெற்றி 90 சதவீதம் உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.
அனைத்து கட்சிகளுக்குமே முழுமையாக அனைத்து இடங்களிலும் போட்டியிட முடியவில்லை என்ற வருத்தம் இருப்பதாகவும் இருப்பினும் கிடைத்துள்ள வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வோம் எனவும் தெரிவித்தார்.
10 ஆண்டுக் கால அதிமுக ஆட்சியில், சாக்கடை வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு சீர்கேடுகள் இருந்தது எனவும் திமுக அரசு வந்தும் கிராமங்களில் பல திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை எனவும் கூறிய அவர், இதற்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தாதே காரணம் எனவும், மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு அதிமுக அரசு தான் காரணம் எனவும் விமர்சித்தார்.
ஆனால் திமுக அரசு தேர்தலின் போது சொன்னது போலவே, ஆட்சியமைத்தவுடன் 9 மாவட்டங்களில் கிராமப்புற தேர்தலை நடத்தியதோடு, தற்போது நகர்ப்புற தேர்தலையும் நடத்துகிறது என தெரிவித்தார். பொங்கல் பரிசுத்தொகையாக 1000 ரூபாய் அதிமுக கொடுத்த போது 5 ஆயிரம் ரூபாய் கேட்ட திமுக, ஆட்சிக்கு வந்ததும் இரண்டு தவணையாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கியதை மக்கள் மறக்கமாட்டார்கள் எனவும் இது தொடர்பாக அதிமுகவின் பொய் பிரச்சாரத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லி வருகிறோம் எனவும் தெரிவித்தார்.
சில இடங்களில் பொங்கல் பரிசுத்தொகுப்பில் இருந்த பிரச்சினைகள் களையப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளதாகக் கூறிய அவர், இந்த விவகாரத்தில் அதிமுக கூறுவது உண்மை அல்ல எனவும் தெரிவித்தார்.
ஹிஜாப் அணிவது காலம்காலமாக இருந்து வருகிறது எனக்குறிப்பிட்ட அவர், ஆனால் தேர்தல் அரசியலுக்காக இதை பிரச்னையாக மாற்றுவதாகக் குறிப்பிட்டார். கோவை மாநகராட்சியில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் சூயஸ் திட்டம் தற்போது பல கோடி ரூபாய் அளவிற்குச் செலவிடப்பட்டு விட்டதால் அதனை தற்போதைய நிலையில் ஏற்க வேண்டி உள்ளது எனவும் ஆனால் கொள்கை ரீதியாக அதனை எதிர்ப்பதாக அவர் தெரிவித்தார்.
நீட் விவகாரத்தில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பொய் சொல்கிறார் என குற்றம்சாட்டிய அவர், நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த ஆவணங்களைப் படித்துப் பார்த்துவிட்டுப் பேச வேண்டும் என கூறினார். அண்ணாமலை கூறும் மாணவிகள் திராவிட இயக்கங்களால் கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீட்டில் தான் மருத்துவம் படிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.