கோவை மாநகராட்சியில் காய்ந்த மரக்கிளைகளை அகற்றி துகள்களாக்கி மரங்களுக்கு உரமாக்கும் பணி தீவிரம்

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மரங்களில் உள்ள காய்ந்த மரக்கிளைகளை அகற்றி இயந்திரம் மூலம் துகள்களாக்கி அதே மரங்களுக்கு உரமாக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மரங்களில் உள்ள காய்ந்த மரக்கிளைகளை அகற்றி இயந்திரம் மூலம் துகள்களாக்கி அதே மரங்களுக்கு உரமாக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.



கோவையில் கோடைக்காலம் துவங்குவதற்கு முன்பாகவே வெளியின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் சாலையோரம் உள்ள மரங்கள் தண்ணீர் இன்றி வறண்டு வருகின்றன.

இதனால் மரக்கிளைகள் காய்ந்து அதில் உள்ள இலைகள் சாலைகளில் விழுகின்றன. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் குப்பைகள் அதிகரிக்கின்றன. மேலும் சாலையில் விழும் இலைகளால் வாகன ஒட்டிகளும் அவதியடைந்து வருகின்றனர்.

இதனிடையே, கோவை மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டலங்களிலும் மண்டலத்திற்கு ஒரு டிராக்டர் மற்றும் மரக்கிளைகளைத் துகள்களாக்கும் இயந்திரம் என அனைத்து மண்டலங்களிலும் டிராக்டர்கள் ரோந்து செல்கின்றன.



அப்போது காய்ந்த மரக்கிளைகள், இலைகள் போன்றவற்றை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி அந்த இயந்திரத்தில் போடுகின்றனர். உடனடியாக மரக்கிளைகள், இலைகள் துகள்களாக மாறுகின்றன. இந்த துகள்கள் அனைத்தும் அதே மரத்திற்கு உரமாகப் போடப்படுகின்றன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தனியார் அமைப்புடன் இணைந்து இந்த டிராக்டர் மற்றும் இயந்திரங்கள் மாநகராட்சிக்குப் பெறப்பட்டன.

வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது போன்று விழும் தறுவாயில் உள்ள மரக்கிளைகள் அகற்றப்பட்டன. தற்போது வெயிலின் தாக்கம் காரணமாக மரங்கள் வறண்டு மரக்கிளைகள் காய்ந்து வருகின்றன. அவ்வாறு உள்ள மரக்கிளைகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது,’’ என்றார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...