அதிமுக- பாஜக தனியாகப் போட்டியிட்டாலும் அது ஒன்றுதான் என மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்-திருப்பூரில் துரை வைகோ பேச்சு

அதிமுக-பாஜக தனியாகப் போட்டியிட்டாலும் அது ஒன்றுதான் என மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள் எனவும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சட்டமன்ற தேர்தலை விட 80 சதவீதம் அதிகமாக திமுக கூட்டணி வெற்றி பெறும் என திருப்பூரில் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: அதிமுக- பாஜக தனியாகப் போட்டியிட்டாலும் அது ஒன்றுதான் என மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள் எனவும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சட்டமன்ற தேர்தலை விட 80 சதவீதம் அதிகமாக திமுக கூட்டணி வெற்றி பெறும் என திருப்பூரில் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.



திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் மதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது இதில் மதிமுகவின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பொய்யான தகவல்களைக் கூறி வருவதாகவும் பொய் குற்றச்சாட்டுகளுக்கான பதிலை மக்களிடம் எடுத்துக் கூறி வருவதாகவும் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலை அதிமுக நடத்தாதன் காரணமாகத் தமிழகத்திற்கு வர வேண்டிய 2500 கோடிக்கும் அதிகமான நிதி கிடைக்கப்பெறாமல் இருப்பதாகவும் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் நடைபெறாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

மாநிலங்களுக்கான நிதி வழங்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு எனவும் ஆனால் மாநில சுயாட்சியை மதிக்காமல் பாஜக செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டதாக அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்து வருவதாகவும் ஆனால் அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, காவல்துறையினர் பாதுகாப்பு இல்லாத சூழல் குறித்தும் அவர் சிந்தித்துப் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.



சட்டமன்றம் முடக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி பகல் கனவு கண்டு வருவதாகவும், இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஜனநாயக ரீதியில் செயல்படும் எனவும் அதிமுக-பாஜக தனித்தனியாகப் போட்டியிட்டாலும், அது ஒன்றுதான் என மக்கள் தெரிந்து கொண்டு உள்ளதாகவும், கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே இவர்கள் திருந்தியிருக்க வேண்டும் ஆனால் இன்னும் திருந்தவில்லை மக்கள் இவர்களுக்குப் பாடத்தைப் புகட்டுவார்கள் எனவும் கடந்த சட்டமன்ற தேர்தலில் 80 சதவீதம் அதிகமாக திமுக கூட்டணி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெறும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...